Pondicherry

News December 12, 2024

புதுச்சேரி , காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

புதுச்சேரியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டி தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை டிச-12  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

புதுவை முதல்வரை சந்தித்து எம்.எல்.ஏ கோரிக்கை

image

காரைக்கால் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையில் இன்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்து முறையிட்டார்கள். இதில் முதலமைச்சர் அவர்களும் போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் அவர்களை அழைத்து அதற்கான ஒரு நல்ல முடிவை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

News December 11, 2024

புதுவை: சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

image

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் சில மாற்றங்களை செய்ய வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையில் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தனியாக App Creation செய்து பணிகள் எப்படி நடைபெறுகிறது. எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஆஃப் உருவாக்குவதற்கு ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

News December 11, 2024

புதுச்சேரி வருவாய்த்துறையில் 7 அதிகாரிகள் இடமாற்றம்

image

புதுச்சேரி தலைமைச் செயலக அலுவலக துணை கலெக்டர் வினயராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பாகூர் தாலுகாவில் உள்ள கிருபாகரன் புதுச்சேரி தாலுகாவிற்கும், அங்கு பணியாற்றிய சுந்தரேச ராவ் வில்லியனூருக்கும், வில்லியனூரில் பணியாற்றி வந்த பைஜூ கலால்துறைக்கும் இடமாற்றப்பட்டனர்.

News December 11, 2024

புதுச்சேரி மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 11 முதல் 13 வரை தேதிகளில் புதுச்சேரியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் பாதுகாப்போடு இருக்குமாறும் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என மீனவர் நலத்துறை இன்று அறிவித்துள்ளது.

News December 11, 2024

திருவண்ணாமலைக்கு ஸ்பெஷல் பஸ் இயக்கம்

image

P.R.T.C மேலாண் இயக்குநரின் அறிவுறுத்தலின்படி காரை கிளையில் இருந்து டிச.12, 13 தேதிகளில் காரைக்காலில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் 12.12.24 அன்று மதியம் 12.05, மாலை 6.30, 13.12.24 காலை 6.05, 7.10, 10.30.இயக்கப்படுகின்றன. பயணம் செய்ய விரும்புவர்கள் பேருந்து நிலைய முன்பதிவு அலுவலகத்திலும் பஸ் இந்தியா App மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News December 10, 2024

புதுச்சேரி: கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுச்சேரி இணை வேளாண் இயக்குனர் அலுவலகம் நேற்று செய்திக்குறிப்பில் புதுச்சேரி அரசு வேளாண் துறை தோட்டக்கலை இயக்கம் மூலமாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் சார்ந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 2024-25ஆம் ஆண்டிற்கான தேனீ வளர்ப்பு, பழம் மற்றும் காய்கறி தள்ளுவண்டி ஆகிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கடனுடன் மானியம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News December 10, 2024

திருமாவளவன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ சபரிமலை பயணம்

image

அவர் நீடூழி வாழ வேண்டி விசிக புதுச்சேரி பாகூர் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் தாயப்பன் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான தொல். திருமாவளவன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டி அக்கட்சியின் தொண்டர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்தனர். மேலும் நேற்று கன்னியகோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்றனர். உங்கள் கருத்துக்களை COMMENTஇல் பதிவிடவும்.

News December 9, 2024

புதுச்சேரியில் உயிரிழந்த குழந்தையின் கண்கள் தானம்

image

லாஸ்பேட்டை தொகுதி ஆனந்தா நகரைச் சேர்ந்த மகாலட்சுமியின் சிறப்பு குழந்தை உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி தலைமையில் குழந்தையின் கருவிழி தானமாக பெறப்பட்டது. இதுவரை தானத்தின் மூலம் நான்கு பேர் கண் பார்வை பெற்றனர். மேலும் 5 நபர்கள் இறப்புக்கு பிறகு கண்களை தானமாக குடும்பத்தினர் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!