India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
, “புதுவை அரசு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 வங்கிக்கணக்கில் வரவு வைத்து வருகிறது. இதை பல வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லை என பழைய கடன் பாக்கி என்று அந்த பணத்தை பிடித்தம் செய்கின்றன. இது ஈவு இரக்கமற்ற செயல். உடனடியாக வங்கிகள் பிடித்தம் செய்த பணத்தை திருப்பி வழங்க வேண்டும். இல்லையேல் திமுக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தெரிவித்தார்.
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக, அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர், 2.21 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அந்த நபர், கொடுத்த பணியை முடித்த பின்னர், சம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். அவர் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுவை & காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, புதுவையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
காரைக்கால் தோமாஸ் அருள் திடல் பகுதி இராஜேந்திரன் மற்றும் கணேசன் ஆகிய இருவரது வீடுகளில் இன்று மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய்த்துறை மூலம் தலா ரூ.20,000 காசோலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
புதுவையில் வார இறுதி நாட்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார். இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. புதுச்சேரி வந்த விக்னேஷ் சிவன் சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயனனை சந்தித்து, கடற்கரை சாலையில் உள்ள அரசு ஹோட்டலை விலைபேசியதால் அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். அரசு ஹோட்டலை விற்க இயலாது என அமைச்சர் மறுத்துள்ளார்.
புதுச்சேரிவிமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி விமான நிலையம் வரும், 20ஆம் தேதி முதல் ‘இண்டிகோ’ விமான சேவை தொடங்குகிறது. பெங்களூரில் இருந்து பகல் 12:20 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர் பகல் 12:40 மணிக்கு ஐதராபாத் புறப்பட்டு செல்கிறது. அங்கிருந்து மாலை 4:50 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. பின்னர் மாலை 5:10 மணிக்கு பெங்களூருக்கு செல்லும் என்றார்.
ராஜ்நிவாசில், கவர்னரை சந்தித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மனு அளித்துவிட்டு வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறும்போது, புதுச்சேரி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் தொலைபேசியில் கூட கேட்கவில்லை. அவர், புதுச்சேரியை அலட்சியம் செய்கிறார். புதுச்சேரியில் இரட்டை ரயில் இன்ஜின் ஆட்சி நடக்கிறது. ஒருபுறம் மோடியும், மறுபுறம் ரங்கசாமியும் இழுப்பதால் ரயில் அங்கேயே நிற்கிறது என்றார்.
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டி தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை டிச-12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையில் இன்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்து முறையிட்டார்கள். இதில் முதலமைச்சர் அவர்களும் போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் அவர்களை அழைத்து அதற்கான ஒரு நல்ல முடிவை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.