India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுவை கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை மணலில் இறங்க போலீசார் தடை விதித்துள்ளனர். உள்ளூர் மக்களும், வெளி மாநில சுற்றுலா பயணிகளும் கடற்கரைக்கு வந்து கடல் அழகை ரசித்து நிற்க அனுமதிக்கும் போலீசார், அவர்கள் கடற்கரையில் இறங்க முயற்சிக்கும்போது, வானிலை எச்சரிக்கையை கூறி அறிவுறுத்தி அவர்களை வெளியேற்றினர்.
குறைந்த காற்றழுத்தம் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து இன்று மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே மீன்பிடிக்க சென்றவர்கள் கரை திரும்பியுள்ளனர். அனைத்து படகுகளும் இன்று தேங்காய்திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI), புதுச்சேரி கிளை உடன் இணைந்து பத்திரப் பதிவிற்கு இணையத்தளத்தில் முன்பதிவு செய்யும் பொழுதே கட்டணத்தை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பத்திரப் பதிவு செய்ய வரும் மக்கள் தங்கள் பதிவு கட்டணத்தை நெட்பாங்கிங் சேவை மூலம் செலுத்தலாம். இந்த இணையதள சேவையினை முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவையில் அலுவலகத்தில் இன்று துவங்கி வைத்தார்.
புதுச்சேரியில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தலைக்கவசம் கட்டாயமாகிறது. விதியை மீறி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து, மேலும் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் தலைக்கவசம் கட்டாயம் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 19ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சுமாா் 20 செ.மீ அளவுக்குள் மழை இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது. அதனால், சமீபத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அடையாளப்படுத்தி தற்போது வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.
புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சா் லட்சுமிநாராயணன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியிலிருந்து மீண்டும் விமான சேவை வரும் டிச.20ஆம் தேதி பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தொடங்குகிறது.
இதையடுத்து இலாசுப்பேட்டை விமான நிலையத்தில் பயணிகளுக்கு நினைவுப் பரிசு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த 01-12-2024 அன்று பால்மணி என்பவருக்கு சொந்தமான விசைப்பலகில் 18 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றது. அப்பொழுது அவர்களை இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்களை விடுதலை செய்து சொந்த ஊருக்கு வந்தனர்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் மற்றும் கடலோர காவல் படை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் அண்ணா திடலில் ரூ.9.6 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் மற்றும் திடலைச் சுற்றி நகராட்சி கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை முதலமைச்சர் ரங்கசாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து விளையாட்டு அரங்கத்தையும் கடைகளையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காரைக்கால் GHல் ஜிப்மர் மருத்துவர்களால் துவங்கப்பட்டுள்ள எலும்புமுறிவு மருத்துவமனைக்கு பாஜக செயற்குழு உறுப்பினர் மற்றும் CGM, ரவிச்சந்திரன் முயற்சியால் ONGC மூலம் ரூபாய் 15 லட்சம் மதிப்பில் பல மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இது காரை ஏழை மக்களின் இலவச சிகிச்சைக்காக மிகவும் பயனுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.