India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் வாழ்த்துச் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் விண்ணின் வெளிச்சம்! மண்ணின் விருட்சம்! மனிதம் மலர! மானிடன் போற்ற! அன்பை மட்டுமே விதைத்து சென்ற இறைமகன் இயேசு பிரான் பிறந்த இத்திருநாளில் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்கிறேன். இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வணிகர்களுடன் காவல்துறையினர் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். வணிகர்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்களைப் பற்றி புகாரளிக்கவும் ஊக்குவிக்கப்பட்டனர். மேலும் புத்தாண்டை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி பிற்பகல் முதல் ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்துள்ள இரண்டு எம்எல்ஏக்கள் கடிதம் குறித்து சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். சிறப்பு சட்டமன்றத்தை கூட்டினால் சபாநாயகர் எதிரான தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கும் என்றார்.
புதுச்சேரி முத்திரையார்பாளையம், காந்தி திருநல்லுார், மேற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், கொத்தனார். ஓய்வு நேரங்களில் மீன்பிடிக்க செல்வார் பாலமுருகன் திருக்காஞ்சி, சங்கராபரணி ஆற்றில் மீன்பிடிக்க சென்றார்.எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்த பாலமுருகன் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை நோணாங்குப்பம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, பாரடைஸ் பீச்சில் இருந்த குடில்கள், ஜெட்டிகள் சேதமடைந்தன. படகு சவாரி மட்டும் இயக்கப்பட்டு வந்தது. பாரடைஸ் பீச் சீரமைப்பிற்கு பின், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை நாட்களான நேற்று முன்தினம் சனி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களில், 14.5 லட்சம் ரூபாய் சுற்றுலாப் பயணிகள் மூலம் சுற்றுலாத்துறைக்கு வருமானம் கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் வீட்டு வாசல்களில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திரங்களை தொங்க விட்டு கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதை அலங்கரித்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா புதுச்சேரியின் இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கத்தோலிக்க பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி தேவாலயத்தில் 25 அடி உயர மெகாசைஸ் கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் ராஜிவ் காந்தி புதிய பஸ் நிலையம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தில் 31 கடைகள் உள்ளன. உருளையன்பேட்டை காந்தி நகரைச் சேர்ந்த மூர்த்தி, அனைத்து கடைகளையும் பொது ஏலத்தில் விட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேற்று பஸ் நிலைய 31 கடைகளையும் பொது ஏலத்தில் விட வேண்டும் ஜனவரி 6இல் விசாரணை நடக்கிறது.
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் நேற்று விடுத்துள்ள செய்திகுறிப்பில்; “சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை பொருட்கள், ஆன்லைன் புக்கிங் பாலியல் தொழில், மசாஜ்கள் உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன. மனித குல அழிவிற்கு காரணமான இச்செயல்களை அனுமதித்தால், எதிர்காலத்தில் நம் மாநிலம் பெருத்த கலாசார சீர்கேட்டை நோக்கிச் செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் ஹசாரே ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நகரில் நேற்று நடந்தது. போட்டியில் புதுச்சேரி அணி மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 285 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 289 ரன்கள் எடுத்து, அபார வெற்றி பெற்றது. அமன் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆந்திராவை சேர்ந்த பி.இ., படிக்கும் வினித் ரெட்டி, சந்தோஷ், மஞ்சு, உள்ளிட்ட 6 மாணவர்கள் நேற்று புதுச்சேரி வந்தனர். தலைமை செயலகம் எதிரில் கடலில் இறங்கி விளையாடினர். அப்போது, வினித்ரெட்டி, கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். வினித்ரெட்டியை காப்பாற்ற முடியவில்லை. அவரைத் தேடும் பணி நடைபெற்றது. இன்று மாணவனின் உடல் கடற்கரை சாலையில் உள்ள அஜந்தா ஹோட்டல் அருகே கரை ஒதுங்கியது.
Sorry, no posts matched your criteria.