India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் கிறிஸ்மஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது நேற்று இரவு சுப்பையா சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசலிக்கா ஆலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது இதில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு அங்கு கிறிஸ்துமஸ் குடிலில் உள்ளகுழந்தை இயேசுவை வழிபட்டார் ஏராளமான கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்
திருப்பதியில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று மாலை 3 மணிக்கு புதுவை டூ திருப்பதி புறப்படும், மெமு எக்ஸ்பிரஸ் ரயில் ரேணிகுண்டா வரை மட்டுமே செல்லும். அந்த பகுதியில் இருந்து திருப்பதி வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருப்பதி டூ புதுவை நாளை காலை 4:00 மணிக்கு புறப்படும் மெமு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
புதுவை சபாநாயகர் செல்வம் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி சுயேச்சை எம்.எல்.ஏ.,நேரு கடந்த 19ம் தேதியும், பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் கடந்த 20ம் தேதியும் சட்டசபை செயலரிடம் மனு கொடுத்த நிலையில், நேற்று உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ. (பா.ஜ., ஆதரவு சுயேச்சை) சிவசங்கர், சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி, சட்டசபை செயலர் தயாளனிடம் மனு அளித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இறைமகன் இயேசு என்றும் நம்மோடு இருக்கிறார். என் பாதையை இந்த பண்டிகை உணர்த்துகிறது. இயேசுவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் குழந்தை இயேசுவின் அன்பும் அருளும் ஆசீர்வாதம் என்றும் கிடைப்பதாக அமையட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசைப் பின்பற்றி 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் பெரும்பாலும் சிபிஎஸ்இ கல்வி முறை பின்பற்றப்படுவதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் வேளாண்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது இன்று காரைக்கால் காமராஜர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் பல்வேறு குறைகளை முன்வைத்தனர். குறிப்பாக விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் காட்டுப் பன்றியானது புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்து நாசப்படுத்துகின்றது.
புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவர் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் ஜனவரி 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான அனுமதி சீட்டுகள் ஜனவரி 13ஆம் தேதி முதல் வழங்கப்படும். தேர்வுகள் ஆன்லைன் மூலம் ஜனவரி 18ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் சென்னை புதுச்சேரி டெல்லி கொல்கத்தா மும்பை ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெறும்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ நேரு நேற்று ஆளுநருக்கு அனுப்பியுள்ள மனுவில், “கடலில் மூழ்கி இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இளைஞர்கள் என பலர் பலியாகி வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் உயிர் காக்கும் காவலர்களை பணி அமர்த்தி, கடலில் இறங்கி மகிழும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வரும் வாகனங்களை நிறுத்த உப்பளம் பகுதியில் புதிய துறைமுக வளாகம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், பெத்தி செமினாா் தொடக்க பள்ளி, பழைய துறைமுக வளாகம், பழைய பேருந்து நிலையம், பாரதிதாசன் மகளிா் கல்லூரி, நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகம், முத்தியால்பேட்டை வாசவி & பாத்திமா பள்ளி, புதிய பேருந்து நிலையம் 10 இடங்கள் உள்ளன என டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்தாா்.
அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரராசு. இவர் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் குடில் செய்வது வழக்கம். இந்த வருடம் வித்தியாசமான முறையில் இணையவழி குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வை மையமாக வைத்து செல் போன்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் செய்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.