India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். தொடர்ந்து தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது அதன்படி இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் ராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி,தேர்வு எழுத ஹால் டிக்கெட் தராமல், மாணவிகளை அலைக்கழிப்பதாகவும், காமராஜர் கல்வி திட்டம் பொருந்தாது என, சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறுவது முற்றிலும் தவறு. உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த 38 வயது நபர், தனது மனைவியை விட்டு பிரிந்து, பிளஸ் 2 படிக்கும் தனது 17 வயது மகளுடன் வசிக்கிறார். மது போதையில், தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். நடந்த சம்பவத்தை, அச்சிறுமி தனது தாயிடம் கூறினார். இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, சிறுமியின் தந்தையை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வரும் சனிக்கிழமை (28.12.2024) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை புற்றுநோய் பிரச்சனைகளுக்கான மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவுள்ளனர். இதில் காரைக்கால் வாழ் பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தங்களை கேட்டுக்கொள்கிறது.
கோவாவில் ஆசிய அளவிலான ரோல்பால் போட்டி நான்கு நாட்கள் நடந்தன. இந்தியா சார்பில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தங்கப்பதக்கம் வென்ற மகளிர் அணியை சேர்ந்த காரைக்கால் கல்லுாரி மாணவி வைஷாலிக்கு பதக்கக்கோப்பை அவருக்கு வழங்கப்பட்டது. பதக்கம் வென்ற அவர் நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி கவர்னர் மற்றும் முதல்வருக்கு நேற்று அனுப்பியுள்ள புகார் மனுவில், அரசு மகளிர் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத ஹால்டிக்கெட் தராமல் அலைகழிப்பதாகவும் மாணவிகள் மனஉளைச்சலில் உள்ளனர். கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர், தலமைச்செயலாளர், கல்வித்துறை செயலாளர் ஆகியோர் இதில் தலையிட்டு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கிட வலியுறுத்தினார்.
புதுச்சேரி தேங்காய்த்திட்டில் நேற்று நடைபெற்ற பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் ரங்கசாமி 450 கறவைப் பசுக்களை அரசு 75 சதவீத மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான தீவன மானியமும் வழங்கப்படும்.விவசாயிகள் மட்டுமின்றி படித்துவிட்டு வேலையில்லாத இளைஞா்களும் பசுக்களை வளா்த்து பால் உற்பத்தி மூலம் வருவாயை ஈட்டலாம் என்றார்
புதுச்சேரி, காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் விடுதியில், தங்கியுள்ள 4 மாணவர்களின் விலை உயர்ந்த 4 ‘லேப் டாப்’கள் கடந்த 17ம் தேதி திருடு போனது.புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, பல்கலை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். லேப் டாப்களை திருடியது, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
காரைக்கால் அடுத்த கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த மீன்பிடி விசைப்படகை சிறை பிடிக்கப்பட்டதை இலங்கை அரசிடம் இருந்து மீட்டுத்தருமாறு புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் இன்று அமைச்சர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கிளிஞ்சல்மேடு மீனவ பஞ்சாயத்துர்கள் கோரிக்கை வைத்தனர்.
டெல்லியில் நடைபெறும் 2025 வருடம் குடியரசு தின அணிவகுப்புக்கு காரைக்கால் மாவட்டத்திலிருந்து 3 என்எஸ்எஸ் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்தனர். மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் காரைக்கால் மாவட்டத்திற்கு இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பெருமை சேர்த்திடுமாறு பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.