India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் 311 ரேஷன் கடைகளில் 1.90 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். ஜன.3 முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்புகளை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இதுவரை, அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நாளை (ஜன.04) காலை 6 மணி அளவில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பெரம்பலூரில் ஆண், பெண் இருபாலருக்குமான நெடுந்தூர ஓட்டப் போட்டி ஜன.05-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025-ஆம் ஆண்டுக்கான அறிஞர் அண்ணா நெடுந்துர ஓட்டப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரு பிரிவுகளில், ஜன.5-ஆம் தேதி காலை 6 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட தொண்டமாந்துறையில் வரும் 8ஆம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி நடைபெற்று வருகிறது. எனவே தொண்டமாந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் அதற்கு முன்னதாக மனுக்களை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கும், இத்தேர்வுகளில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தேர்ச்சி பெற்றவர்களும், 21-32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட, கல்யாண் நகரில் சுரேஷ் மற்றும் யோகேஷ் சர்மா என்பவர்களது எலக்ட்ரானிக் கடையிலும்,சக்தி என்பவரது போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.27000 பணமும் ரூ.2,50,000 மதிப்புள்ள பொருட்களை நேற்றிரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். விண்ணப்பத்தினை http://perambalur.nic.in எனும் இணையதளத்தின் வழியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் இது குறித்த கூடுதல் விவரங்களை 04328-275020 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் கடந்த 2024-ம் ஆண்டில் நடந்த 567 சாலை விபத்துகளில் 151 பேர் உயிரிழந்துள்ளனர். 634 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2023-ம் ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு இறப்பு குறைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதுமாக கடந்த ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மொத்தம் 2,31,048 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மின்மோட்டார் பம்ப்செட்களை செல்போன் மூலம் இயக்கும் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெற வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9842470358, 9944850423 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் தமிழ்ச்சங்கத்தினர், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி, பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் திருவள்ளுவர் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்திற்கும் மனு கொடுக்கப்பட்டுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.