India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர், களத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவானது இன்று மே.13-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி பாசிலா 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3ம் இடமும், அரசுப் பள்ளிகளில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில் நேற்று(மே 12) தலைமை ஆசிரியர் செல்வராசு உள்ளிட்டோர் மாணவியை வாழ்த்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கம், தி பெடரல் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் இணைந்து இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உலக செவிலியர் தினம் மற்றும் உலக அன்னையர் தினம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது. இதில் பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைசெல்வன் பங்கேற்று அசத்தி விழா குழுவினரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
பெரம்பலூர் கோனேரி பாளையம் மலைப்பாதை பிரிவு அருகில் இன்று 3 மணி அளவில் பெரம்பலூரில் இருந்து அரும்பாவூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் கோபி என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அந்த வழியே ரோந்து சென்ற பெரம்பலூர் காவல்துறையினர், அவர பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட இசைப்பள்ளியில் திருச்சி மண்டல கலை பண்பாட்டு துறை மையத்துடன், சவகர் சிறுவர் மன்றம் இணைந்து மே 1 முதல் நடைபெற்ற கோடைகால இசை பயிற்சி முகாம் நடைபெற்று நேற்றுடன் பயிற்சி நிறை விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) நாகவல்லி கலந்துகொண்டு பயிற்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பெரம்பலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர்: அடைக்கம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது பின்புறம் வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ரம்யா (25) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் வைரிசெட்டிபாளையம் சேர்ந்த கமல் (36) என்பதும் மது போதையில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், “கிராமப்புற மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி புனரமைக்கப்பட வேண்டும், குடிநீர் தட்டுப்பாடு குறித்த புகார்கள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.