Perambalur

News January 25, 2026

பெரம்பலூர்: வாய்க்கால் தூர்வாரும் பணி குறித்து கலெக்டர் ஆய்வு

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நொச்சியம் முதல் சிறுவாச்சூர் வரை நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுவதை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News January 24, 2026

பெரம்பலூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 24, 2026

பெரம்பலூர்: டிகிரி போதும்-அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 24, 2026

பெரம்பலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 24, 2026

பெரம்பலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<> கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

பெரம்பலூர்: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

பெரம்பலூர் மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

News January 24, 2026

பெரம்பலூர்: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

image

பெரம்பலூர் மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in<<>> என்ற இணையதளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

பெரம்பலூர்: செயல்பாட்டுக்கு வந்த புதிய திட்டம்!

image

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நாகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களால் நடத்தப்படக்கூடிய வகையில் சிறுதானிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று (23.01.2026) மாவட்ட ஆட்சியர் மிருநாளினி திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மகளிர் சுய உதவிக் குழு மேம்பட இந்த உணவகம் ஒரு உதவியாக இருக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News January 24, 2026

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

image

1.ஆதனூர் கைலாசநாதர் கோயில்
2.அணைபாடி ஆதீஸ்வரர் கோயில்
3.அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
4.அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
5.கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
6.இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
7.இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
8.கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
9.காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க !

News January 24, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் மக்களுக்கு அத்தியாவசிய அடையாள ஆவணங்கள் (ம) சட்டப்பூர்வ ஆவணங்களை வழங்குதல் தொடர்பாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி ஜன.28 பெரம்பலூர், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்; ஜன.29 வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!