Perambalur

News January 25, 2026

பெரம்பலூர்: 12th போதும்..அரசு வேலை!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

பெரம்பலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

பெரம்பலூர்: நாளை கிராம சபைக் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) தேதி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊராட்சிகளின் நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதர கோரிக்கைகள் குறித்து விவாதித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News January 25, 2026

பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

News January 25, 2026

பெரம்பலூர்: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (42). இவர் மீது பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அவர் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதையடுத்து, மகிளா நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து பாடாலூர் போலீசார் சுதாகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News January 25, 2026

பெரம்பலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News January 25, 2026

பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் , ஆலத்தூர் ஆகிய 4 ஒன்றியத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் நாளை (ஜன.26) குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 11 மணியளவில் கிராம ஊராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் கிராம சபை கூட்டமானது தொடங்கி நடைபெறும் என பெரம்பலூர் மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News January 25, 2026

பெரம்பலூர்: வாய்க்கால் தூர்வாரும் பணி குறித்து கலெக்டர் ஆய்வு

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நொச்சியம் முதல் சிறுவாச்சூர் வரை நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுவதை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!