Perambalur

News January 27, 2026

பெரம்பலூர் ஆட்சியருக்கு ஆளுநர் ரவி பாராட்டு

image

சென்னை ராஜ்பவனில் இன்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில், கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்டத்திற்காக, தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்.

News January 26, 2026

பெரம்பலூர்: சனி தோஷம் நீங்க இந்த கோயிலுக்கு போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க.

News January 26, 2026

பெரம்பலூர்: வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

image

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: C<>LICK HE<<>>RE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

பெரம்பலூர்: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

image

பெரம்பலூர் மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> ‘இங்கே கிளிக்’ <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!

News January 26, 2026

பெரம்பலூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் 77வது குடியரசு தின விழா

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 77வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளும் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர். இந்நிகழ்வில் பேரணியும் சாகசமும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News January 26, 2026

பெரம்பலூர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய<> இங்கே க்ளிக்<<>> செய்யுங்க. SHARE IT

News January 26, 2026

பெரம்பலூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

image

1. பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

News January 25, 2026

பெரம்பலூரில் வாகன பிரச்சாரத்தில் காவலருக்கு சிரமம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி கொடியசைத்து, வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்லக்கூடிய வாகனத்தில் உரிய இருக்கை வசதி இல்லாததால், பெண் போலீஸ் ஒருவர் அவதிப்பட்டு, துப்பாக்கியை பிடித்த நிலை உருவானது. பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு அதிக வசதிகள் வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

News January 25, 2026

பெரம்பலூர்: திருமணத்தடை நீக்கும் கோவில்!

image

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான மதுரகாளியம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!