India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் மே- 20 ஆம் தேதியான இன்று காலை முதலே பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதன்படி செட்டிகுளம் (0.5 செ.மீ) ,பாடாலூர்( 1.7 செ.மீ), பெரம்பலூர் ( 0.3 செ.மீ) , எறையூர்(0. 6செ .மீ) ,கிருஷ்ணாபுரம் ( 0.4 செ.மீ) வ. களத்தூர் (0.5 செ. மீ), வேப்பந்தட்டை (0.9 செ. மீ) மேற்கண்டவாறு மழையின் அளவுகள் பதிவாகியுள்ளது.
பெரம்பலூர் அருகே திருமாந்துறையில் சுங்கச்சாவடி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்டேக் காலாவதியான நிலையில் பணம் செலுத்த சொன்ன ஊழியரை, நான் திமுக கவுன்சிலர் எனக்கூறி சுங்கச்சாடி ஊழியரை ஒரு நபர் தாக்கியதாக கூறப்படுகிறது. சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட வார்டு எண் 20-ல் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழாவை முன்னிட்டு இன்று கோவிலில் சுவாமிக்கு பூஜை செய்து பந்தகால் நடும் பணி துவக்கி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் முக்கியஸ்தர்கள், தர்மகர்த்தா, கோவில் பூசாரி, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர், ஆலத்தூர், பாடாலூர் பேருந்து நிலையம் அருகில் கூத்தனூரைச் சேர்ந்த நல்லேந்திரன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் காலையில் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 80 லட்சம் மதிப்புள்ள 25 கீ போர்டு, 10 ஆண்ட்ராய்ட் போன்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது பிற்பகல் 1 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இந்தமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரம்பலூர், வல்லாபுரம் அருகே கேரளாவில் இருந்து காரில் கடத்தி சென்ற 130 கிலோ கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பெரம்பலூர் நெடுஞ்சாலை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஆறுபேரில் ஐந்து பேரை கைது செய்த போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குற்றவாளிகளையும் மாவட்ட மதுவிலக்கு பிரிவினரிடம் (கலால்)ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-25 ஆண்டுக்கான அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நேரடி 2ஆம் ஆண்டு முழுநேரம் தொழில் பயிற்சி உடன் கூடிய பட்டைய படிப்பிற்கான மாணவர்களின் சேர்க்கை விண்ணப்ப பதிவு மாணவர்கள் (20/5/2024) வரை https://tnpoly.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் (அ) கீழக்கணவாய் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரில் விண்ணப்பிக்க வழிவகை செய்துள்ளது என தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் பெரம்பலூரில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும். மேலும் விபரங்களுக்கு https://www.iob.in/careers என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்கியது. அப்போது பேருந்துக்கு பின்னால் டூவீலரில் வந்த விசிக பிரமுகர் ரசித் அலி வழிவிடுமாறு கூறவே, அரசு பேருந்து நடத்துநர் ராஜேந்திரனுக்கும், ரசித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நடத்துநர் கையை ரசித் கடித்துள்ளார். நடத்துநர் சிகிச்சை பெறும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.