Perambalur

News May 12, 2024

பெரம்பலூர்: சாலை விபத்து – ஒருவர் படுகாயம்

image

பெரம்பலூர் கோனேரி பாளையம் மலைப்பாதை பிரிவு அருகில் இன்று 3 மணி அளவில் பெரம்பலூரில் இருந்து அரும்பாவூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அம்பேத்கர் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் கோபி என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அந்த வழியே ரோந்து சென்ற பெரம்பலூர் காவல்துறையினர், அவர பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News May 12, 2024

பெரம்பலூர்: கோடைகால பயிற்சி முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட இசைப்பள்ளியில் திருச்சி மண்டல கலை பண்பாட்டு துறை மையத்துடன், சவகர் சிறுவர் மன்றம் இணைந்து மே 1 முதல் நடைபெற்ற கோடைகால இசை பயிற்சி முகாம் நடைபெற்று நேற்றுடன் பயிற்சி நிறை விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) நாகவல்லி கலந்துகொண்டு பயிற்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

News May 12, 2024

பெரம்பலூரில் கனமழை…!

image

நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பெரம்பலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News May 11, 2024

பெரம்பலூர் அருகே விபத்து

image

பெரம்பலூர்: அடைக்கம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது பின்புறம் வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ரம்யா (25) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் வைரிசெட்டிபாளையம் சேர்ந்த கமல் (36) என்பதும் மது போதையில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

News May 11, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், “கிராமப்புற மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி புனரமைக்கப்பட வேண்டும், குடிநீர் தட்டுப்பாடு குறித்த புகார்கள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

News May 11, 2024

பெரம்பலூர் மழைக்கு வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.11) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

டூவீலர் மோதிய விபத்தில் முதியவர் பலி

image

வேப்பந்தட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்த லோகநாதன்(68) வேப்பந்தட்டையில் சில்லி கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சைக்கிளில் சென்றார். அப்போது பூலாம்பாடியை சேர்ந்த பிரதீப்(28) என்பவர் அவ்வழியே டூவீலரில் வந்த போது லோகநாதன் மீது மோதினார். இதில் காயமடைந்த இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார்.

News May 11, 2024

பெரம்பலூர் அருகே கார் மோதி பலி!

image

பெரம்பலூர் மாவட்டம் கவர்ப்பனையை சேர்ந்தவர் செல்வராஜ்(40). இவர் அங்குள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம்(மே 9) டூவீலரில் மனைவி ஜெயலட்சுமியுடன் மரவநத்தத்ததிற்க்கு சென்று கொண்டிருந்தார். நெய்க்குப்பை அருகே சென்றபோது கார் எதிர்பாராத விதமாக செல்வராஜ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 11, 2024

கால்நடைத்துறை அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

image

கோடை காலத்தில் அதிகரித்துள்ள வெயில் கால்நடைகளின் ஆரோக்கியம் (ம) உற்பத்தி திறனில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் சுற்றுப்புற வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் (ம) ஈரப்பதம் 70% க்கு மேல் அதிகரிக்கும் போதும் வெப்ப அயற்சி ஏற்படுகிறது. எனவே கால்நடைத்துறை சார்பில் தெரிவித்துள்ளபடி கறவை மாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 50 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும் நிழலில் பராமரிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

பெரம்பலூர்: ஜூலை 2-ல் துணைத் தேர்வு?

image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(மே 10) வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று(மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

error: Content is protected !!