India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாக வாட்டி வந்த வெயில் காரணமாக, இம்மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ம) 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு <

பெரம்பலூர் மாவட்டத்தில் 2023 2024ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட குறு சிறு (ம) நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்பட உள்ளதால் விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் awards.fametn.com என்ற இணையத்தில் மே 20-க்கும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்ட நிலையில், 94.82 % தேர்ச்சி அடைந்து மாநிலத்தில் 6-வது இடம் பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளி , அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளி என மொத்தம் 79 மேல் நிலைப் பள்ளி உள்ள நிலையில், 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மே.15) கோடை மழை பொழிந்து வருகிறது. நீண்ட நாட்களாக வெயிலின் தாக்கத்தால் தவித்துக் கொண்டிருந்த பெரம்பலூர் மக்களுக்கு, இந்த மழை ஆறுதல் அளித்துள்ளது. மேலும், இன்னும் சில நாட்களுக்கு இப்பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட
வேளாண் நிலங்களின் மண்வளத்தை பாதுகாக்கவும், அதிக மகசூல் மூலம் கூடுதல் வருமானம் பெறவும் விவசாயிகள் தக்கைப் பூண்டு, மணிலா, அகத்தி, சனப்பை, கொழிஞ்சி, நரிப்பயறு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நடவு செய்து விவசாயிகள் பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் கீதா இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் மைய நூலகத்தில் TNPSC – குரூப் 4 மாதிரி தேர்வு வரும் மே -17 அன்று மதியம் 1 முதல் 4 மணி வரை மாவட்ட நூலகம் மற்றும் திருச்சி NR IAS அகாடமி சார்பில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்தத் தேர்வுக்கு எந்த கட்டணமும் கிடையாது என மாவட்ட மைய முதல் நிலை நூலகர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று +1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பெரம்பலூர் வட்டம் கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 தேர்வு எழுதிய 45 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவி யோகேஸ்வரி பள்ளி அளவில் அதிகபட்சமாக 445 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
+1 ல் 100 % தேர்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் உட்பட உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.