India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவில் திருத்தேரோட்டம் நாளை மே-23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வருகையை முன்னிட்டு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வசதி, குடிநீர் வசதி, தற்காலிக கழிவறை வசதி ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 -25ஆம் ஆண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான இணைய வழியில் விண்ணப்பம் செய்ய 24-5-2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என சென்னை கல்லூரிக் கல்வி இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் (இரவு 7 மணி வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள இலாடபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மயிலூற்று அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக தற்போது இந்த அருவியில் நீர்வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது பெரம்பலூர் மாவட்ட மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எறையூர் சர்க்கரை ஆலை கிராமத்தில் நேற்று இரவு IOB வங்கிக்கு சொந்தமான ATM, பெருமத்தூர் சாலையில் உள்ள ATM என 2 இயந்திரங்களிலும் மர்ம நபர்கள் உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்டுள்ளனர். இன்று இது சம்பந்தமாக வங்கி மேலாளர் மங்களமேடு காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்தில் நேரில் சென்று தடயங்கள் சேகரிக்கப்பட்டு வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மே- 20 ஆம் தேதியான இன்று காலை முதலே பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதன்படி செட்டிகுளம் (0.5 செ.மீ) ,பாடாலூர்( 1.7 செ.மீ), பெரம்பலூர் ( 0.3 செ.மீ) , எறையூர்(0. 6செ .மீ) ,கிருஷ்ணாபுரம் ( 0.4 செ.மீ) வ. களத்தூர் (0.5 செ. மீ), வேப்பந்தட்டை (0.9 செ. மீ) மேற்கண்டவாறு மழையின் அளவுகள் பதிவாகியுள்ளது.
பெரம்பலூர் அருகே திருமாந்துறையில் சுங்கச்சாவடி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்டேக் காலாவதியான நிலையில் பணம் செலுத்த சொன்ன ஊழியரை, நான் திமுக கவுன்சிலர் எனக்கூறி சுங்கச்சாடி ஊழியரை ஒரு நபர் தாக்கியதாக கூறப்படுகிறது. சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட வார்டு எண் 20-ல் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழாவை முன்னிட்டு இன்று கோவிலில் சுவாமிக்கு பூஜை செய்து பந்தகால் நடும் பணி துவக்கி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் முக்கியஸ்தர்கள், தர்மகர்த்தா, கோவில் பூசாரி, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர், ஆலத்தூர், பாடாலூர் பேருந்து நிலையம் அருகில் கூத்தனூரைச் சேர்ந்த நல்லேந்திரன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் காலையில் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 80 லட்சம் மதிப்புள்ள 25 கீ போர்டு, 10 ஆண்ட்ராய்ட் போன்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது பிற்பகல் 1 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இந்தமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.