India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பராமரிப்பில்லாத கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பொதுப்பணித்துறை அலுவலர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை ஓரிரு வாரத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 18 வயதுக்குட்பட்ட 43 சிறுவர்கள் இந்த ஆண்டில் மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜோலார்பேட்டையில் 17 பேரும், காட்பாடியில் 16 பேரும், ஓசூரில் 4 பேரும், சேலம் மற்றும் தர்மபுரியில் தலா 3 பேரும் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கரூர் காந்திகிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயலட்சுமி வித்யாலயா மாணவ, மாணவிகள் ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஸ்.சௌமியா 500-க்கு 477 மதிப்பெண்களையும், கே.சௌமியா – 476, பி.ஹர்சிகா 470, தனிஷ்கா 469 மதிப்பெண்களும் பெற்றனர். இதில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. மேலும் பள்ளியின் முதல்வர் கார்த்திகா லட்சுமி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்
நெமிலி தாலுகா பொய்கை நல்லூர் கிராமத்தில் இன்று(மே 8) தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொய்கை நல்லூர் கிராமத்தில் தேர் வெள்ளோட்ட முன்னேற்பாடு குறித்து நெமிலி வட்டாட்சியர் பாலச்சந்தர் நேற்று(மே 7) ஆய்வு நடத்தினார். அப்போது தேரோட்டம் நடைபெறும் தெருகளில் மேடு பள்ளங்கள் ஏதேனும் உள்ளதா, மின் வயர்களின் நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். உடன் போலீசார் இருந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து 2021 மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் (மே 7) மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி அமைச்சர் ராஜகண்ணப்பன் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பெரம்பலூர், சிறுவாச்சூர் இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று(மே 7) பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில், உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. நான் முதல்வன் திட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விரிவாக பேசினர். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, திருச்சியில் இன்று கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எஸ்.புதூர் துணை மின்நிலையத்தில் குளத்துப்பட்டி மின்பாதையில் உள்ள மின்கம்பிகளை தரம் உயர்த்தும் பணி நடைபெறவுள்ளது. பராமரிப்பு பணியின்போது வாராப்பூர் அரியாண்டிபட்டி குளத்துப்பட்டி கிழவயல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று புதன்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டார பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்த வேளையில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. தற்போது நீர்மட்டம் 115 அடியாக உள்ளது. அணைக்கு நீர் இருப்பு 1727 மில்லியன் கன அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கன அடியாக திறந்து விடப்படுகிறது.
சென்னை, ஜாபர்கான்பேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் சரவணன்(32). இவருக்கு நிரஞ்சன் சாய் எனும் 1 வயது ஆண் குழந்தை இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு, கீழே இருந்த வேர்கடலை பருப்பை எடுத்து குழந்தை சாய் விழுங்க முயற்சித்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நேற்று(மே 7) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
Sorry, no posts matched your criteria.