India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கோடைக்கால வெப்பம் தொடர்பான சிகிச்சை பிரிவினை முதன்மைச் செயலாளர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மனிதகுல சேவையே உலக ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பாக, தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாட்டில், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை பொறியியல் கல்லூரியில், 36வது தமிழ்நாடு மாநில அளவிலான 13 வயத்திற்குட்பட்டவர்களுக்கான “சதுரங்க சாம்பியன்ஷிப் 2024” போட்டி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 – பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மு.கலைவாணி உள்ளார்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த ஜிஜேந்திரகுமார்,
ஞானசேகர், ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் இன்று அதிகாலை 97 கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு 4 சக்கர வாகனம், ஒரு 2 சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு,3 நபர்களையும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உடுமலையில் வசித்து வந்தவர் கிஷோர். இவர் தன் சொந்த ஊரான பள்ள பாளையம் கிராமத்தில் நேற்று மதியம் தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்து விடுவதற்காக சென்றார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிஷோரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர் உயிர் இழந்தார்.
ராமநாதசுவாமி கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது லட்சுமண தீர்த்தம். இதனை சுற்றி சீதா தீர்த்தம், பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில், தண்ணீரில் கல் மிதக்கும் இடங்கள் அமைந்துள்ளன. ராமநாதபுரத்தில் 64 தீர்த்த குளங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. புராணக் கதைகளைத் தழுவிய இத்தலத்தில் இலட்சுமண தீர்த்தம் இலட்சுமனேஸ்வரர் பெயரில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் கருணாநிதி (55) விவசாயியான இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள மோட்டாரை போடுவதற்காக மோட்டாரை அவர் தொட்டபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழுவூர் குப்பம் பகுதியில் J.R.S கால்பந்து குழு முன்னெடுப்பில் 25ஆம் ஆண்டு கோடைகால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. அதையொட்டி பயிற்சியில் கலந்துக்கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் திமுக சார்பில்
திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சே.பிரேம் ஆனந்த்
வழங்கினார். அனைவரும் சிறப்பான முறையில் பயிற்சி பெற வேண்டும் என வாழ்த்தினார்.
சிவகங்கையில் உள்ள சிறுகூடல்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்த கவிஞர் கண்ணதாசனை நினைவு கூறும் வகையில், இந்த மணிமண்டபம் 1990இல் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992இல் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதில் கண்ணதாசனின் சிலை, 2400 புத்தகங்கள், அவரின் அரிய புகைப்படங்கள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.