India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பாபுவை அவரது இல்லத்தில் நேற்று மாலையில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் மேலும் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாமக்கல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சூரியமூர்த்தி நேற்று இரவு திடீரென மாற்றப்பட்டார். இதனையடுத்து அதே கட்சியை சேர்ந்த மாதேஸ்வரன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானதால் வேட்பாளர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது
கரூர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கரூர் மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் வழக்குரைஞர் நாகராஜன் என்பவர் மட்டும் முதல்நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 2-ம் நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் முன் அனுமதி எதுவும் பெறாமல் திமுக கட்சிக்கு ஆதரவாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 19ம் தேதி எம்எல்ஏ பிரபாகரன், திமுக கட்சி பேச்சாளர் கோவிந்தன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதையடுத்து, அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்ட எம்எல்ஏ பிரபாகரன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் தீவிரம் அடைந்திருப்பதால், மு.மத்திய அமைச்சரும் தற்போதைய எம்பியுமான பழனி மாணிக்கத்திற்கு 2024 மக்களவை தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இந்த தேர்தலில் திமுக தஞ்சை தொகுதி வேட்பாளராக வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலியை திமுக தலைமை அறிவித்துள்ளது. இதனால் பழனி மாணிக்கம் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகே வாக்கு சேகரிக்க சமூக வலைத்தளம், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
விருத்தாசலத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், வேளாண் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு மனுக்களுடன் வரும் பொது மக்கள், அதிகாரிகளை சந்தித்து குறைகளை தெரிவித்து வந்தனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது. இதனால், அப்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ, கூல்டிரிங்ஸ் கடைகளிலும் வியாபாரம் சரிந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலாளரும், வடக்கு மண்டல பொறுப்பாளருமான எஸ்.டி.இசை, தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட பலர் திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
தருமபுரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக நேற்று(மார்ச் 21) அசோகன் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று(மார்ச் 21) சென்னை அதிமுக கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்த அசோகன், வாழ்த்து பெற்று தனது நன்றியை தெரிவித்தார். இதில் மு.அமைச்சர் கே.பி.அன்பழகன், பூக்கடை ரவி, பொன்னுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று பெரியகுளம் உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.