Tamilnadu

News March 24, 2024

தி.மலை அருகே தீ விபத்து

image

ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் அசோக்குமார், சந்திரகலா என்பவருடைய கோழிப் பண்ணை கொட்டகையின் மேலே சென்ற மின் கம்பிகள் உரசியதில் கோழி பண்ணை மீது தீப்பொறிகள் பட்டு கடும் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் இருந்த 100 க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் எரிந்து நாசமாகியது.

ஆரணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் கடும் சேதாரம் தவிர்க்கப்பட்டது.

News March 24, 2024

சங்கரன்கோவில் அருகே மூதாட்டி பலி

image

சங்கரன் கோவில் சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி (70) என்ற மூதாட்டி பொதிகை தெப்பக்குளத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக குளத்தில் தவறி விழுந்து பலியானார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 24, 2024

விருத்தாசலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் 

image

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கடலூர் அருகே விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் எளிதாக கோயிலுக்கு சென்றுவர அரசு சிறப்பு பேருந்துகள் இன்று(மார்ச்.24) காலை முதல் விருத்தாசலம் பேருந்து நிலையம் முதல் கொளஞ்சியப்பர் கோவில் வரை இயக்கப்பட்டு வருகின்றது.

News March 24, 2024

தேனி டூ தினகரனுக்கும் உள்ள நெருக்கம்

image

தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேனி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1999 முதல் 2004 வரை தேனி மக்களவை உறுப்பினராகவும் 2004 முதல் 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவருக்கு வயது 60.

News March 24, 2024

12 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம்

image

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய அருகே உள்ள சின்ன மேலமையூர் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சின்ன முத்துமாரியம்மன் கோவிலில் இன்று (மார்ச்-24) 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

News March 24, 2024

கிளாம்பாக்கம்: பேருந்துகளை சிறைபிடித்த பொதுமக்கள்.

image

வார இறுதி நாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நேற்றிரவு திருவண்ணாமலை செல்வதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். ஆனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இல்லாததால் தென் மாவட்டம் செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 24, 2024

கொசு மருந்து தெளிக்க கோரிக்கை

image

ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பிரியா நகர், அம்பிகா நகர், ராஜிவ் காந்தி நகர், காரணை புதுச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகளில் குப்பைகள் குவிந்தும் , கழிவுநீர் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வெயில் காலத்திலும் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.  ஊராட்சி நிர்வாகம் கழிவுநீரை அகற்றி கொசு மருந்து தெளிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 24, 2024

திருச்சியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

image

திருச்சி பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள புனித சகாயமாதா கிறிஸ்தவ பேராலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி சுமார் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் தென்னங்கீற்றால் செய்யப்பட்ட கிறிஸ்தவ சிலுவைகளை உயரே தூக்கி பிடித்தும், தோளில் சுமந்த படியும் வீதிகளில் ஊர்வலம் சென்றனர்.

News March 24, 2024

நீலகிரியில் இராசா நாளை வருகை

image

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அறிக்கையில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.இராசா நாளை நீலகிரி வருகிறார். அவருக்கு   கோத்தகிரியில் முற்பகல் 11 மணி, உதகையில் பகல்  12 மணி , கூடலூரில் மாலை 4 மணிக்கும் மாபெறும் வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே திமுக மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News March 24, 2024

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் மாகேஸ்வர பூஜை

image

மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் மடத்தில் இன்று மாகேஸ்வர பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து குருமகா சன்னிதானத்துக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

error: Content is protected !!