Tamilnadu

News March 24, 2024

திருப்பத்தூர்: வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

image

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

News March 24, 2024

பழனியில் விழாக்கோலம் பூண்டது

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் இன்று மாலை பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பழனியை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தம் எடுத்தும் காவடி எடுத்தும் ஆடிப்பாடி வருவதால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டது.

News March 24, 2024

அரியலூர் அருகே 3 பேர் கைது

image

அரியலூர், ஜெயங்கொண்டம் ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்த சின்ன பொண்ணு என்பவருக்கும் அதே பகுதியைப் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடைய குடும்பத்தினருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. கடந்த 22ம் தேதியன்று சுந்தரமூர்த்தியும் அவரது உறவினரும் சின்னபொண்ணை கீழே தள்ளி திட்டியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிந்து சுந்தரமூர்த்தி அவரது உறவினர் 3 பேரை கைது செய்தனர்.

News March 24, 2024

செங்கல்பட்டு: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன். அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று (1989) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு கட்சி மாறி அதிமுகவில் இணைந்து கட்சியில் அச்சரப்பாக்கம் சட்டமன்ற தனி தொகுதியில் (1991 To 95) சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ராமகிருஷ்ணன் இன்று (மார்ச்-24) காலமானார்.

News March 24, 2024

மதுரை: வாகன சோதனையில் சிக்கிய ரூ.9 லட்சம்

image

மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கள்ளிக்குடி – விருதுநகர் 4 வழி சாலையில் காரியாபட்டி விலக்கு பகுதியில் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரை நோக்கி வந்த காரில் ரூ.9 லட்சம் உரிய அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News March 24, 2024

ஈரோடு: நாளை விடுமுறை அறிவிப்பு

image

பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நாளை நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக நாளை (26ம் தேதி), ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறும் எனவும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30ம் தேதி பணி நாளாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

புதுவையில் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

image

புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட தலைமை துணை தேர்தல் சான்றளிப்பு குழுக்களிடம் அனுமதி பெறாத விளம்பரங்களை தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வெளியிட வேண்டாம். சான்றிதழ் பெறாத விளம்பரங்கள், காணொலிக் காட்சிகளை வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறும் செயலாகும். எனவே, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜவஹா் கூறினார்.

News March 24, 2024

திருப்பூரில் இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் தயாரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக திருப்பூர் ராஜாராம் வீதியில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான செல்வராஜ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

News March 24, 2024

புதுகை ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை உள்ளிட்ட குழுவினா், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தைக் கைப்பற்றும்போது, உடனுக்குடன் பிரத்யேக செயலியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா.மொ்சி ரம்யா நேற்று அறிவுறுத்தினாா். புதுகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

News March 24, 2024

திருப்பூர் அருகே குப்பை கிடங்கில் தீ விபத்து

image

திருப்பூர் அடுத்து முத்தூர் ஈரோடு சாலை ரவுண்டானா அருகில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான காலி இடத்தில் மயானம் மற்றும் குப்பை கிடங்கு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எறிய தொடங்கியது. இந்த தீ கோடை வெயில் உக்கிர தாக்கத்தினால் மளமளவென்று கொட்டிக் கிடந்த காய்ந்த குப்பைகள் முழுவதும் வேகமாக பரவி தீ விபத்து ஏற்பட்டது.

error: Content is protected !!