Tamilnadu

News March 24, 2024

பெரம்பலூர் : பங்குனி உத்திர திருத்தேரோட்டம்

image

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா முன்னிட்டு கடந்த 16ம் தேதி மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

News March 24, 2024

பந்தலூர்: வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ

image

பந்தலூர் அருகே கோட்டப்பாடி பகுதிகளில் வனப்பகுதி உள்ளது. தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் செடி கொடிகளும் காய்ந்த நிலையில் உள்ளன. திடீரென சேரம்பாடி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனகாப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News March 24, 2024

விருதுநகர்: சர்ப்ரைஸ் கொடுத்த கலெக்டர்…

image

விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே நடைபெற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு நூறு சதவிகித வாக்கு பதிவு என்பதை வலியுறுத்தி பேசினார். பின்பு இதுவரை நடந்த தேர்தல்களில் தவறாமல் வாக்கு பதிவு செய்து அதிக முறை ஜனநாயக கடமையாற்றிய முதியவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவம் செய்தார்.

News March 24, 2024

வேலூர்: வீட்டுக்கு வீடு பிரியாணி

image

வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர் பிரியாணி செய்யும் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்டனர். மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

News March 24, 2024

விழுப்புரம்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

image

விக்கிரவாண்டி, எழாய் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி ஐஸ்வர்யா. கடந்த மார்ச் 21-ம் தேதி வெங்கடேசன் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ஐஸ்வர்யாவிற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஐஸ்வர்யா கேட்ட நிலையில், அவரை வெங்கடேசன் மற்றும் உறவினர்கள் திட்டி கொடுமைபடுத்தியுள்ளனர் . இதுகுறித்து விழுப்புரம் மகளிர் போலீசார் (மார்ச் 24) 9 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 24, 2024

ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழ முன்னீர் பள்ளம் புது கிராமம் அருகே தாமிரபரணி ஆற்றில் அருகில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி விட்டதாக பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் இன்று (மார்ச் 24) வந்துள்ளது. இந்த தகவலின்பேரில் பாளையங்கோட்டை மீட்பு படையினர் விரைந்து சென்று சிறுவனை உடலை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தேடி மீட்டனர்.

News March 24, 2024

சேலத்தில் 30ம் தேதி கமல் பிரச்சாரம்

image

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 29ஆம் தேதி ஈரோட்டிலும், சேலத்தில் 30ம் தேதியும், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

News March 24, 2024

காஞ்சிபுரம் அருகே கோர விபத்து

image

வாலாஜாபாத் அருகே லிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் வ/45 செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தவர். இவர் வழக்கம் போல் பணிக்கு இன்று காலை சைக்கிளில் வாரணவாசி பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 24, 2024

தி.மலை: மாணவிகளிடம் சில்மிஷம்

image

கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும் ஒரு மாணவியை கட்டிப்பிடித்து திருமணம் செய்து கொள்வதாக தகராறு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் மோகன் ராஜுவை கண்ணமங்கலம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News March 24, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து

image

நெமிலி தாலுகா சயனபுரத்தை சேர்ந்தவர் சீனு( 55). இவர் நேற்று இரவு சேந்தமங்கலம் நெமிலி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!