India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி ஆ.ராசாவும், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் நாளை (மார்ச். 25) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பாலக்கோடு ஜோதி அள்ளியை சேர்ந்த விவசாயி ராஜீ 55. இவரது மனைவி சாலம்மாள் . குடிப்பழக்கம் உடைய ராஜீக்கு அல்சர் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். மனைவி குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். மனமுடைந்த ராஜி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலக்கோடு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20-ஆம் தேதி சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், கொலை செய்யப்பட்ட பெண் தேனியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. கத்தாரில் வேலை பார்த்தபோது நடராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கோவையில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசி சென்றனர். போலீசார் விசாரணையில் நடராஜன் மற்றும் நண்பர் கைது.
சென்னை: போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்ததை கண்டித்து கடலூரில் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் மாவட்ட தலைவர் ஞானராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அனுமதியின்றியும், சட்ட விரோதமாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 13 பெண்கள் உள்பட 58 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (24.03.2024) ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் பாண்டி. இவர் நேற்று பைக்கில் ஸ்ரீவி – ராஜபாளையம் சாலை, மடவார்வளாகம் பகுதியில் சென்றபோது, ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கார் தங்கவேல்பாண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் கார் ஓட்டி வந்த மாங்குடி பாண்டியராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கை குழந்தையுடன் வரும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று சாமி தரிசனம் செய்ய வைத்தார். இந்த நிகழ்வில் எஸ்.பி கார்த்திகேயன், அறங்காவலர் குழு தலைவர் ஜீவா உள்பட பலர் உடன் இருந்தனர்.
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் வகையில் அனைத்து கட்சியினரின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட, வண்ணங்களில் துண்டுகள் மற்றும் மப்பிளர்கள் தயாரிக்கும் பணி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் அரசியல் கட்சியின் சின்னங்களும் பொறிக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை, நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி தொடர்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் டாக்டர்.செல்லக்குமார் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக களக்காடு பால்ராஜ் இன்று இரவுக்குள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sorry, no posts matched your criteria.