India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த குருவாலப்பர்கோயில் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி சாலையை கடக்க முயன்றபோது பூவாய்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவமணி இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றபோது ஆனந்தி மீது பைக் மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீவைகுண்ட பெருமாள் வைகாசி உற்சவம் முன்னிட்டு இரவு சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வைகுண்ட பெருமாள் நான்கு ராஜ வீதி உலாவில் உலா வந்தது. இதில் பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்து கோவிந்தா கோவிந்தா என்ற கோசத்துடன் பெருமாளை வழிபட்டனர்.
புத்தாநத்தம் அடுத்த கட்டாரியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி
கிருஷ்ணமூர்த்தி. கும்பகோணத்தில் ஜவுளி கடை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஊருக்கு வந்தவர் வீட்டிற்கு வராமல் மது அருந்திவிட்டு எளமனம் நிழற்குடையில் இருந்தார். இந்நிலையில், இன்று மர்ம இறந்த கிடந்தார். தகவலறிந்து வந்த புத்தாநத்தம் போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணியின் முகவர்கள் பயிற்சி முகாம் இன்று புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் செல்வகணபதி, புதுச்சேரி அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அதிமுக முகவர்களின் ஆலோசனை கூட்டம் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
குமரி மாவட்டத்தில் விளையும் சிறப்பான வாழைகளில் ஒன்று மட்டி. பார்க்க ரஸ்தாளி பழம் போல் இருக்கும் மட்டி பழம் மணமும், இனிப்பு சுவையும் மருத்துவ குணமும் கொண்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மட்டி பழத்திற்கு கடந்த ஆண்டு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற நிலையில், புவிசார் குறியீடு வழங்க உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் இன்று புவிசார் குறியீடு அமைப்பால் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த மகாராஜன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மூளை சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. உறுப்பு தானம் செய்யப்பட்ட மகாராஜனின் உடலுக்கு இன்று (ஜூன் 2) நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மரியாதை செய்யப்பட்டது.
சிவகங்கை அன்னியேந்தல் ஊராட்சியில் மத்திய, மாநில அரசின் பணம் நூதன முறையில் கொள்ளை அடிக்கப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டிச்சாமி மீது வேல்முருகன் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக பல புகார்கள் மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாக கூறியுள்ளார்.
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதில் புதுச்சேரி கடற்கரைகள், சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று 94.8% டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
குரூப் 4 தேர்வு வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 223 தேர்வு மையங்களில் 65,520 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை காலை 7 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை பதிவு செய்து தேர்வுகூட முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணிக்கு ரூ.2,500 ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள வீடியோகிராபர்கள் ஆட்சியர் அலுவலகத்தை அணுக தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.