Tamilnadu

News June 3, 2024

தென்காசியில் 1135 போலீசார் -எஸ்பி தகவல்

image

தென்காசி பாராளுமன்ற தொகுதி நாளை வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள், ஏழு டிஎஸ்பிக்கள், 33 ஆய்வாளர்கள் எஸ்ஐ ,எஸ்எஸ்ஐ உள்ளிட்ட போலீசார் 940 நபர்கள், சிஐஎஸ்எப் 63 நபர்கள், டிஎஸ்பி போலீசார் 90 நபர்கள், என 1135 பேர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

News June 3, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் விசிட்

image

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார். ஏற்பாடுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனே சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News June 3, 2024

கடலூர் எஸ்.பி முக்கிய அறிவிப்பு

image

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதனால் கடலூரில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் தேவனாம்பட்டினம் ஆர்.சி. பாலத்திலிருந்து இடது புறமாக காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் வழியாக மையத்திற்கும், மற்றவர்கள் பாலத்திலிருந்து வலது புறமாக பார்க்கிங் செல்ல வேண்டும் என எஸ்.பி.ராஜாராம் இன்று தெரிவித்தார்.

News June 3, 2024

நாமக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஈரோடு மாவட்டம் பூந்துறையை சேர்ந்தவர் சரவணகுமார் (50) சமையல் தொழிலாளியாக உள்ளார். இன்று அதிகாலை காடச்சநல்லூர் பகுதியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு சரவணகுமார் மற்றும் அவருடைய மனைவி, செல்வி வந்துள்ளனர். அதிகாலை நேரத்தில் கடைக்கு செல்வதற்காக காடச்சநல்லூர் பிரதான சாலை பகுதிக்கு சரவணகுமார் வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News June 3, 2024

கோவை: போலீசார் தீவிர பாதுகாப்பு

image

நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News June 3, 2024

வாக்குகள் எண்ணும் பணியாளர்களுக்கு பயிற்சி

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியானது தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

News June 3, 2024

நாகை:  காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

image

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நாகையில் இன்று நடைபெற்றது. புத்தூர் ஈசிஆர் சாலைக்கு அருகில் உள்ள சோலை மஹாலில் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்று தர வலியுறுத்தியும் அதற்காக நீதி கேட்டு பூம்புகாரில் இருந்து மேட்டூர் அணை வரை நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

News June 3, 2024

நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 2024ம் ஆண்டு ஜீன் 10 முதல் 21 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,98,400 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார். 

News June 3, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை

image

அரக்கோணம் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ரகசிய தன்மையை பாதுகாப்பதை மீறுவதாக அமைகின்ற எந்த தகவலையும் யாரிடமும் தெரிவிக்க கூடாது. விதிமுறைகளை மீறுகின்ற நபருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படும் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என ஆட்சி வளர்மதி தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

காஞ்சி ஹாக்கி கிளப் அணிக்கு முதல் பரிசு

image

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இதில், மாநில அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் காஞ்சி ஹாக்கி கிளப் அணிக்கு முதல் பரிசும், சென்னை மவுன்ட் டாலர்ஸ் ஹாக்கி கிளப் அணிக்கு  இரண்டாவது பரிசும் வழங்கப்பட்டது.

error: Content is protected !!