Tamilnadu

News January 2, 2026

தஞ்சை: திமுக மகளிர் மாநாடு அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜன.19ம் தேதி அன்று வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் டெல்டா மண்டலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான திமுக மகளிரணியினர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 2, 2026

BREAKING: மெரினா- கடைகளை அகற்ற அதிரடி உத்தரவு

image

மெரினா கடற்கரையில் உணவுப் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர வேறு எந்த கடைகளையும் அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைவர்களின் நினைவிடங்கள் பின்புறம் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் கடைகள் அமைக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

News January 2, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (ஜன -02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

JUST IN திருப்பரங்குன்றம்: ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவு…

image

திருப்பரங்குன்றம் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த, மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. விழாவில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி. திருப்பரங்குன்றம் மலை அடிவாரம் முதல் உச்சி வரை கால்நடைகளை பலியிடவும், அசைவம் கொண்டு செல்லவும் கூடாது. கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கு தொடர்பாக அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜன.20 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News January 2, 2026

நெல்லை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 2, 2026

கிருஷ்ணகிரி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 2, 2026

திருவள்ளூரில் சிவன் நடனமாடிய கோயில்.. உங்களுக்கு தெரியுமா ?

image

இந்த கோயில் நாசராஜரின் ஐந்து நடன சபைகளில் முதல் ரத்தின சமையாகும். சிவன் இங்கு “ஊர்த்துவ தாண்டவம்” எனும் நடனம் ஆடினார். பேராலமரம் காட்டில் இடம் பெற்றதன் காரணமாக இந்த சிவன் வடாரண்யேஸ்வரர் eன வழிபடப்படுகிறார். இக்கோயிலில் திருமணம் தடை நீக்கம், சனி பிரச்சினைகள், பணப்பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு விசேஷ பலன் இருப்பது ஐதீகம். இதை ஷேர் பண்ணி இந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு போய்ட்டு வாங்க

News January 2, 2026

கள்ளக்குறிச்சி: திருமண தடையா? இதை பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். மேலும் இந்த கோயில் வந்து தரிசித்தால் திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் தோஷங்கள் தீரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 2, 2026

வேலூர்: திருமணத் தடைகள் நீங்க இங்கு போங்க!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், 2026-லும் முருகப் பெருமான் வள்ளியை மணம் புரிந்த புனிதத் தலமாகத் திகழ்கிறது. இத்தலம் திருமணத் தடைகளை நீக்கி, கர்ம வினைகளைத் தீர்க்கும் மகாசக்தி கொண்டது. சித்தர்கள் தவம் புரிந்த இக்குகைக்கோயில், பக்தர்களுக்குப் பேரமைதியையும் காரிய வெற்றியையும் வழங்குகிறது.

News January 2, 2026

திருப்பூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!