India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் இன்று ( ஜூன் 9) நடந்த டி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்வில் 13 தேர்வு மையங்களில் 36,705 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் 7855 பேர் தேர்வு எழுத வரவில்லை. 28,850 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையத்திற்கு காலதாமதமாக வந்த பலர் 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படாததால் தேர்வு எழுத வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான பி. மதுசூதனன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், 3,545 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,049 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் ஆந்திரா, தெலங்கானா மற்றும் திண்டுக்கலை சேர்ந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் இன்று பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வருகை தந்து முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இணைய வழி குற்றங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கி குற்ற மோசடி நபர்களிடம் இருந்து விழிப்பாக இருக்கும்படி தகுந்த அறிவுரைகளை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 4 தேர்வு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 200 மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, இந்நிலையில் தூத்துக்குடியில் தூய மரியன்னை பள்ளியில் நடைபெற்று வரும் குரூப் 4 தேர்வினை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சேர்ந்த மாரி செல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் பாம்பு கார்த்திக் என்பவரை கோவில்பட்டி போலீசாரும் எஸ்பி-யின் தனிப்பிரிவு போலீசாரும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பாம்பு கார்த்திகை சென்னையில் கைது செய்ததாக பாம்பு கார்த்திக்கின் தாயார் பேச்சியம்மாள் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் திடீரென வந்து கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தை தற்போது ரூ.16,000 முதல் ரூ.20,000 ஆக உயர்த்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு விரைவில் சன்மானம் உயர்த்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லை முழுமை திட்டம் செயல்படுத்துவதற்காக உள்ளூர் திட்டக் குழுமம் சார்பில் மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. இதற்காக “கியூ ஆர்” கோடு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பேருந்து நிலையம் உள்ள பொது இடங்களிலும், பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
கோவை ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் பிரிவுகளில் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் அவசியம். தகுதியுடையவர்கள் ஜூன் 20ம் தேதி முன் உரிய சான்றிதழ்களுடன் கோவை கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள, சமூகநலத்துறையில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
வரும் செவ்வாய்க்கிழமை முதல் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்து வாக்கு எண்ணிக்கையும் முடிந்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து, நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.