India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மல்ல பள்ளி ஊராட்சி பனந்தோப்பு பகுதியில் இருந்து சுண்ணாம்பு குட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலை வரை இனைப்பு தார் சாலை உள்ளது. இந்த வழியாக ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். தற்போது அச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுபதால் அச்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவது கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து அதன் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு இன்று (ஜூன்.9) அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 57,778 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 13,337 பேர் தேர்வு எழுத வரவில்லை. 44,441 பேர் தேர்வு எழுதினார் 23 சதவீத பேர் ஆப்சென்ட் ஆகினர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு புறப்படும் முன் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் கழித்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இது ஒரு சாதனை. இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்பதற்காக நான் டெல்லி செல்லவுள்ளேன்” என்றார்.
தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் 154 மையங்களில் குரூப் -4 தேர்வு நடைபெறுகின்றது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட தேனி மேரி மாதா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்களின் நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 228 தேர்வு மையங்களில் அரசு பணியாளர் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (தொகுதி 4) மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி இன்று(09.06.2024) பார்வையிட்டார்.
தி.மலை மாவட்டம் பிற்பட்டோர் நலத்துறையால் செயல்படும் 49 விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 16-06-24 தேதி வரையிலும், விடுதியில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் 15-07-24 வரையிலும் விண்ணப்பத்துடன் வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழுடன் பிற்பட்டோர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டுமென ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுக்காவிற்குட்பட்ட
270 தேர்வு மையங்களில் 361 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இத்தேர்வை 1 லட்சத்து 6 ஆயிரத்து 82 பேர் எழுதுகின்றனர்.
தேனியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாக இருந்த கைரேகை பிரிவு காவல்துறையினர் ஆகியோர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.
தமிழக முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் மையங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.