Tamilnadu

News January 4, 2026

திருச்சி: பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக வரும் 13, 20 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து திருச்சி வழியாக வரும் 14, 21 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 4, 2026

திருவாரூர்: நூல் வெளியீட்டு விழாவில் மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூரில் செந்தில்நாதன் எழுதிய வணக்கம் திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் எழுத்தாளர் ஐவி.நாகராஜன் மற்றும் மாநில துணைதலைவர் கவிஞர் ந.முத்துநிலவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக செந்தில்நாதன் நூல் ஏர்புரை வழங்கினார்.

News January 4, 2026

விழுப்புரம்: மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் கைது!

image

விழுப்புரம்: புதிய பேருந்து நிலையத்தில், மேற்கு காவல் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய கைப்பையுடன் வெளியே வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பையில் இருந்த 160 புதுச்சேரி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

News January 4, 2026

மயிலாடுதுறை: வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று ஜனவரி 4 காலை 9:30 மணி முதல் மாலை 5:30 வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் புதிய உறுப்பினர் சேர்த்தல் திருத்தம் செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்

News January 4, 2026

கோவையை பரபரப்பாக்கிய நபர்

image

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்துக்கு பெட்ரோல் கேனுடன் நேற்று வந்த இளைஞர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். விசாரணையில், அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது யாசின் என்பது, கோவையைச் சேர்ந்த நபர் பணம் பெற்று ஏமாற்றியதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

News January 4, 2026

கோபியில் தட்டி தூக்கிய செங்கோட்டையன்

image

கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுவலூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வேல்முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்ப்பட்டோர் திமுகவிலிருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். செங்கோட்டையன் தவெகவிற்கு வந்த பின், பல்வேறு அரசியல் கட்சியினரை தவெக-வில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

News January 4, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் 206 பேர் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், 2025 ஆண்டில் மட்டும் 579 சாலை விபத்துகளில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகம் மது போதை தலை கவசம் அணியாமல், கைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி சென்ற காரணங்களுக்காக 2,91,482 வாகனங்களுக்கு ₹34,87,100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் காவலர் உட்பட 60 பேர் காயம்

image

நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை, தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காவலர் உட்பட 60 பேர் காயமடைந்தனர். மேலும் இதில் சிவகங்கை மாவட்டம் கீழபூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். 14 காளைகளை பிடித்த தஞ்சை வீரர் ஆனந்த் இரண்டாமிடம் பெற்றார். காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

News January 4, 2026

அரசு வேலை வழங்க சபரிமலையில் நூதன முறையில் கோரிக்கை

image

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க கோரி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பேனரை கையில் ஏந்தி ஊழியர் ஒருவர் வேண்டினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.

News January 4, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் 206 பேர் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், 2025 ஆண்டில் மட்டும் 579 சாலை விபத்துகளில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகம் மது போதை தலை கவசம் அணியாமல், கைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி சென்ற காரணங்களுக்காக 2,91,482 வாகனங்களுக்கு ₹34,87,100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!