India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

பண்ருட்டி அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்த ஞான ஜோதி (63) என்பவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் இரவு காட்டாண்டிகுப்பம்- மேட்டுக்குப்பம் சாலையில் சென்றபோது, திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஞானஜோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

கூகுளில்<

கூகுளில்<

ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) வேலூர் சாய்நாதபுரம் பகுதியில், கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோருடன் வாடகை வீட்டில் தங்கி வந்தார். கல்லூரி மாணவர். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

கூகுளில்<

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகர் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். இந்த நிகழ்வின் போது, திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை சந்திரசேகர் சால்வை அணிவித்து வரவேற்றார்

போரூர் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சில்பா (35). திருநங்கையான இவர், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பாலியல் தொழிலுக்காக வானகரம் சர்வீஸ் சாலையில் நின்ற போது, அங்கு வந்த சில மர்மநபர்கள், வானகரம் பகுதிக்கு அவரை அழைத்து சென்றனர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மர்மநபர்கள், சில்பாவை அடித்து கொன்றதாக தெரிகிறது. இதுகுறித்து வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளையங்காடு பகுதியில் அனுப்பர்பாளையம் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்தபோது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து பாலமுருகன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 114 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.