India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 48.94 அடியாக குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி பவானிசாகர் அணை நீர்மட்டம் 48.20 அடியாக குறைந்து இருந்தது. அதன் பின்னர் தற்போது தான் 48 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு நாமக்கல், சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, திருப்பத்தூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் அரியலூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திருமாவளவனிடம் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டுமாறு தெரிவித்தனர். குழந்தைகளை அன்போடு வாங்கிய திருமாவளவன் குழந்தைகளுக்கு அம்பேத்வளவன் , எழில் செல்வன் என பெயரிட்டு மகிழ்ந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை பகுதியில் கிடப்பிலிருந்த மேம்பால கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோ கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் நான்கு கால்மண்டபம், எல் ஐ சி ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு கடும் வெயிலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரிமளம் ஒன்றியம், கல்லூர் ஊராட்சி, சுதந்திரமும் கிராம மக்கள் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கிராம பகுதிகளில் பல வகையான அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பேனர் வைத்து தேர்தலில் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் விழாவில் பொதுமக்களுக்கு நேற்று இரவு நீர் மோர் வழங்கப்பட்டது. இதில், நீர்மோர் அருந்திய 2 சிறுவர்கள் உட்பட பத்து பேர் வாந்தி மயக்கமடைந்து மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில், 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள இன்று செல்பி பாயிண்ட் அமைக்கபட்டுள்ளது.இதில் புகைப்படம் எடுத்து பரிசுகளை வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி-அல்லிநகரம் நகராட்சி தென்றல் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நன்செய் அறக்கட்டளை மற்றும் வாசவி கிளப் இணைந்து இன்று “துணிப்பை தூக்கத் துணிவோம் ” விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் ஜீவிதா, லோகேஷ், ரிஷப், கலந்து கொண்டு மாணவ செல்வங்களுக்கு துணிப்பைகளையும் , புத்தகங்களையும் வழங்கினார்.
நாமக்கலில் 174 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி ராசிபுரம்- 19, சேந்தமங்கலம்- 29, நாமக்கல்- 18, பரமத்தி வேலூா்- 26, திருச்செங்கோடு- 33, குமாரபாளையம்- 49 என்ற எண்ணிக்கையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் உமா இன்று தெரிவித்துள்ளாா். இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலா் த.முத்துராமலிங்கம், ராசிபுரம் வட்டாட்சியா் சரவணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
ஆற்காட்டில் உள்ள துணிக்கடையில் திமிரியைச் சேர்ந்த சிவசங்கரி (20) என்ற இளம் பெண் வேலை பார்த்து வந்தார். இன்று டீ குடிப்பதற்காக துணி கடையில் இருந்து செல்லும்போது ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் சிவசங்கரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் .ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.