Tamilnadu

News April 12, 2024

ஒரே நாளில் சூடுபிடிக்கும் பிரச்சாரம்

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, ஐஜேகே, நாம் தமிழர் உட்பட 23 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் நாளை (13.4.24) பரிவேந்தரை ஆதரித்து பிரதமர் மோடியும், சந்திரமோகனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமியும், தேன்மொழியை ஆதரித்து சீமான் நெ.1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். 3 முக்கியத் தலைவர்கள் ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News April 12, 2024

2 ஆண்டுகளில் ரூ. 650 கோடி

image

திருவண்ணாமலை தொகுதி தி.மு.க வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து தி.மு.க வினர் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய மு.பெ. கிரி எம்.எல்.ஏ அனைத்து துறைகளின் மூலம் சாலைகள், தடுப்பணைகள், அரசு மருத்துவமனைகள் என ஏராளமான வளர்ச்சிப்பணிகள் சுமார் ரூ.650 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றால் சாலை அமைப்போம் என அதிமுக பொய் பிரச்சாரம் செய்கிறது என்றார்.

News April 12, 2024

மயிலாடுதுறை: மத்திய பாதுகாப்பு படையினரை சந்தித்த எஸ்பி

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு பணிக்காக ஒடிசா மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படையினரில் சிலர் சீர்காழி அடுத்த புத்தூர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று எஸ்பி மீனா அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு குறைகள் ஏதேனும் உள்ளதா என்பதை கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

News April 12, 2024

அடுத்த 4 நாட்களுக்கு மழை

image

தேனி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

அடுத்த 4 நாட்களுக்கு மழை

image

விருதுநகர் உட்பட தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

ரயில்வே தண்டவாளத்தில் இளைஞரின் சடலம்

image

மதுரை அருகே சமயநல்லூர் தேனூர் ரெயில்வே கேட் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. தொடர்ந்து, அவர் யார்? ரயிலில் பயணம் செய்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது தண்டவாள பாதையை கடக்க முயன்ற போது பலியானாரா ? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2024

பெண்கள் பள்ளி அருகே மதுபான கூடம் திறக்க எதிர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி சவுக் நேரு வீதியில்
அரசு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் பள்ளியில் 1500-க்கு மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் பள்ளி அருகில் தேவாலயம், கல்லறை தோட்டம், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்தப் பகுதியில் தனியார் மதுபான கூடம் அமைக்க முயற்சிகள் நடந்த வருகின்றன. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

News April 12, 2024

மதுரையில் இன்று அமித்ஷா கலந்து கொள்ளும் வாகனப் பேரணி

image

மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கலந்து கொள்ளும் வாகனப் பேரணி இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News April 12, 2024

திருச்சி: பிரியாணி செய்யும்போது தீ விபத்து

image

மணிகண்டம் அருகே உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் அப்துல் சமது (60), இவரது மனைவி தாஜு நிஷா (53). நேற்று காலை 11 ரம்ஜான் பண்டிகையொட்டி கேஸ் அடுப்பில் பிரியாணி சமைத்துள்ளார். அப்போது திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காயமடைந்த தாஜூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News April 12, 2024

மின்மாற்றியில் இருந்து கீழே விழுந்த வாலிபர்

image

பள்ளப்பட்டி, ஷா நகர் பகுதியில் மின்வாரியத்தில் கேங்மேனாக பணியாற்றி வருபவர் மணிகண்டன்(26). இவர் நேற்று முன்தினம், பள்ளப்பட்டி மேற்கு தெருவில் பழுதை நீக்குவதற்காக, மின்மாற்றியில் ஏறி பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!