Tamilnadu

News January 5, 2026

தருமபுரியில் இளம்பெண் துடிதுடித்து பலி!

image

பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கோமதி (30). தனது தோழி சந்தியாவுடன் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, எதிரே உள்ள டீ கடைக்கு நடந்து சென்றனர். அப்போது, தருமபுரி நோக்கி வந்த சரக்கு வாகனம் வேகமாக மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த சந்தியா பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

சிவகங்கை மக்களே.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம் வழியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமாரி- தாம்பரம் (ஏசி) எக்ஸ்பிரஸ் (06054-06053), 2வது சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலயங்கள் வழியாக  ஜன-13 முதல் 21 ந்தேதி வரை இரு மார்க்கமும் இயங்கும் சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் தங்கள் பயணத்திற்கு அதிகம் பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News January 5, 2026

நெல்லையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

நெல்லை மாவட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று திங்கள்கிழமை (ஜன.5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, சீதப்பற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, வெள்ளாளன்கோட்டை, முத்தன்குளம், புதூர் மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் இருக்காது. SHARE IT…

News January 5, 2026

திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

செவ்வாப்பேட்டையை அடுத்த திருவூர், சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(40). ஆட்டோ டிரைவரான இவருக்கும், இவரது மனைவி சர்மிளாவிற்கும்(35) ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் – மனைவி இடையே நடந்த தகராறில் சர்மிளா கோபித்துக்கொண்டு சென்றுள்ளார். இதனால், விரக்தியடைந்த பாலமுருகன், தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News January 5, 2026

மயிலாடுதுறை: விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்

image

செங்கோட்டை -மயிலாடுதுறை விரைவு ரயில் ஜனவரி மாதம் 1, 7, 14, 15, 16, 21, 26, 28 தேதிகளில் மட்டும் திருமங்கலம் மதுரை திண்டுக்கல் வழியாக மயிலாடுதுறை வரும், மற்ற தேதிகளில் மாற்று வழிதடமான அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக மயிலாடுதுறை வந்தடையும். மயிலாடுதுறை -செங்கோட்டை விரைவு ரயில் எவ்வித மாற்றமும் இன்று திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் என தெரிவித்துள்ளனர்.

News January 5, 2026

கோவையில் எங்கெல்லாம் மின்தடை

image

கோவையில் நாளை(ஜன.6) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பெரியநாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணர்பாளையம், எம்.ஜி.புதூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)

News January 5, 2026

சென்னை அருகே கோர விபத்து; 2 பேர் உடல் நசுங்கி பலி

image

திலீப், ஸ்டான்லி மற்றும் நீர்ஜ் ஆகியோர் நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தமாக மினி டெம்போவில் வந்து கொண்டிருந்தனர்.சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது மாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த டாரஸ் லாரியின் பின்பகுதியில் டெம்போ பயங்கரமாக மோதியது. இதில் திலீப், ஸ்டா–லின் இருவரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News January 5, 2026

தாரமங்கலம்: மகனின் பிறந்த நாளில் ஏற்பட்ட சோகம்!

image

தொட்டம்பட்டியை சேர்ந்த தமிழ்மணியும், அவரது தம்பி பொன்னுமணியும் பெங்களூரில் இருந்து தங்களது இருசக்கர வாகனத்தில் ஓமலூர் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓமலூர் அருகே அவர்களது டூவீலர் மீது ஜீப் மோதியதில் தமிழ்மணி உயிரிழந்தார். தமிழ்மணி தனது மகனின் பிறந்த நாளை கொண்டாட இருவரும் வந்த போது விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 5, 2026

செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் ஜன (4) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் ஜன (4) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!