Tamilnadu

News April 13, 2024

பாஜக மீது கடும் தாக்கு – திருமாவளவன்

image

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல். திருமாவளவன், அம்பேத்கர் இயற்றி தந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஒழிப்பது தான் மோடி அரசும் இலக்காக உள்ளது. இதனை வெளிப்படையாகவே பாஜகவை சேர்ந்த தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பல இடங்களில் தெரிவித்து வருகின்றனர். இதை முறியடித்து சமூக நீதி காக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

News April 13, 2024

மீறினால் குற்ற நடவடிக்கை: நீலகிரி கலெக்டர்

image

நீலகிரியில் உள்ள மதுபான கிளப்புகள், ஓட்டல் பார்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும், மக்களவைத் தேர்தலை ஒட்டி வருகிற ஏப்ரல் 17, 18, 19 தேதிகள் மற்றும் மகாவீர் ஜெயந்தியான 21ஆம் தேதி மூடப்படும். இதை மீறி, மது விற்பனை செய்தால் மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவின் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி கலெக்டர் எச்சரித்துள்ளார்.

News April 13, 2024

சிவகங்கை -முதுகெலும்பு தாலி இரும்பு எச்சம் கண்டுபிடிப்பு

image

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாகைகுளம் பகுதி ஆற்றுப்படுகையில் முதுமக்கள் தாழி, இரும்பு எச்சங்களை வரலாற்று பேராசிரியர் கண்டறிந்தார். மேலும், இதுகுறித்து பேராசிரியர் பாலசுப்பிரமணியன், “இங்குள்ள ஆற்றுப்படுகையில் 20 ஏக்கரில் 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி மண்ணின் மேற்பரப்பில் குவியல் குவியலாக காணப்படுகின்றன‌. இவை சுமார் 2,600 முதல் 4000 ஆண்டிற்கு மேற்பட்டது” எனக் கூறினார்.

News April 13, 2024

அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக கட்சியின் சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை வகித்து, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் ஊத்தங்கரை எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம், மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் அமீது மற்றும் அதிமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 13, 2024

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி

image

இன்று (12.04.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க. சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

News April 13, 2024

கள்ளக்குறிச்சி: தேர்தல் புறக்கணிப்பு

image

கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலையில் உள்ள 15 ஊராட்சிகளில் 145 கிராமங்கள் உள்ளன. இதில் ஆரம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட கெடார், பட்டிவளவு, மனப்பாச்சி உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கல்வராயன் மலைப்பகுதியில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 13, 2024

கரூரில் வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை

image

கரூரில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப். 19-ம்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்துப் பணியாளர்களும் வாக்களிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள், தனியார் தொழில் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தற்காலிக, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் நிறுவனங்கள் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

கோவை வழியாக புதுடெல்லிக்கு சிறப்பு ரயில்

image

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எர்ணாகுளத்தில் இருந்து ஏப்.19 முதல் மே.31 வரை புது டெல்லிக்கு கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, விஜயவாடா, நாக்பூர், ஆக்ரா, மதுரா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காவலர்கள் ஆலோசனை

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

News April 13, 2024

பெரம்பலூரில் இன்று முக்கிய தலைவர்கள் பிரச்சாரம்

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, ஐஜேகே, நாம் தமிழர் உட்பட 23 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் இன்று(13.4.24) அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமியும், நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து சீமான் நெ.1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

error: Content is protected !!