Tamilnadu

News April 13, 2024

கோவை: சாலை விபத்தில் ஒருவர் பலி

image

ஊட்டி சாலையில் நேற்று மாலை சேலத்தை சேர்ந்த இருவர் டூவீலரில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்றனர். அப்போது, எதிரே அசுர வேகத்தில் வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று பின் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 13, 2024

அரிசி ஆலைகளில் வருமானவரி துறையினர் சோதனை

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே களம்பூரில் சுமார் 150 க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரிசி ஆலைகளில் அரசியல்வாதிகள் பணம், ஆவணங்கள் பதுக்கி உள்ளதாக புகாரின் பேரில் சென்னை வருமானவரி துறை இணை இயக்குநர் தலைமையில் சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 24 அதிகாரிகள் 6 கார்களில் களம்பூரில் உள்ள அரிசி ஆலைகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

News April 13, 2024

ஆம்பூர் அருகே விபத்து

image

ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாண்டியன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2024

ஓட்டுப்பதிவு அன்று சம்பளத்துடன் விடுமுறை

image

புதுவை மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஓட்டுப்பதிவு நாளன்று அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.

News April 13, 2024

பானையுடன் வாக்கு சேகரிக்கும் ஒன்றிய சேர்மன்

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ் புத்துப்பட்டு கிராமத்தில் இன்று (ஏப்.13) காலை பானை சின்னத்திற்கு மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் வாக்கு சேகரித்தார். விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்காக மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் கீழ்புத்துபட்டு கிராமத்தில் இன்று காலை வீடு வீடாக வாக்கு சேகரித்தார். இளைஞர் ஒருவர் தலையில் பானையை சுமந்தபடி சுற்றி வருவது வேடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

News April 13, 2024

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறை

image

மக்களவை தேர்தல் முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறி மது விற்பனை செய்தால்  சட்டபடி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 13) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

முன்னாள் படை வீரர்களுக்கு எஸ்பி அழைப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வேண்டி ஏப்ரல் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் காவல்துறை தீயணைப்பு துறை, வனத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களது பங்களிப்பினை அளிக்கலாம். தேர்தல் பணிக்கு வர விரும்புவோர் 9363868465 தொடர்பு கொள்ளலாம் என எஸ்பி கிரண்ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

மூதாட்டியை ஆரத் தழுவிய பாஜக வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் இன்று (ஏப்.13) நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்பொழுது அங்குள்ள முதியவர் ஒருவரை ஆரத் தழுவி தங்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் வெற்றி பெற்ற பின்பு நிறைவேற்றி தருவதாக நயினார் நாகேந்திரன் வாக்குறுதி அளித்தார்.

News April 13, 2024

கண்டெய்னர் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி

image

எண்ணூர், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் முகமது அப்சல், ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று மாலை பாரத் நகரில் இருந்து சுனாமி குடியிருப்பு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எர்ணாவூர் மேம்பாலம் அருகே வந்தபோது அவரது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2024

மீறினால் குற்ற நடவடிக்கை: நீலகிரி கலெக்டர்

image

நீலகிரியில் உள்ள மதுபான கிளப்புகள், ஓட்டல் பார்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும், மக்களவைத் தேர்தலை ஒட்டி வருகிற ஏப்ரல் 17, 18, 19 தேதிகள் மற்றும் மகாவீர் ஜெயந்தியான 21ஆம் தேதி மூடப்படும். இதை மீறி, மது விற்பனை செய்தால் மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவின் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி கலெக்டர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!