India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அவனியாபுரம்,பாலமேடு,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள, உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 7ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி ஜனவரி 8ம் தேதி மாலை 5 மணிக்கு முன்பதிவு முடியும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தெரிவித்துள்ளார். மாடுபிடி வீரர்கள் இதை பயன்படுத்தி ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம்.

மதுரை மாவட்டத்தில் இன்று (05.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான இலவச பஸ்பாஸ் வழங்கும் முகாம் வரும் ஜனவரி 7-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் முகாம் நடைபெற உள்ளது. இதை, மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 05) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கையில் உலகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தி.மலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கலை கல்லூரி இளங்கலை மூன்றாமாண்டு மாணவர்களுக்கு, இன்று இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் மாநகரில் இன்று (05.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா முதல்நிலைப் போட்டி தேர்விற்கான எழுத்துத் தேர்வு, வருகின்ற ஜன.9ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் எழுத்து தேர்வு திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் பாஸ்கரன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாக இன்று இபிஎஸ் அறிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வயலப்பாடி கிராமத்தில், தனியார் மண்டபத்தில் மகளிர் உரிமை மீட்பு பயணம் குறித்து பாமக சார்பில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், முன்னாள் பாமக மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செங்கல்பட்டு இன்று (ஜனவரி-05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (05.01.26 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம் பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.