Tamilnadu

News January 6, 2026

திருச்சி: தொழில் பங்கீட்டாளர்களுக்கு அழைப்பு

image

தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் சார்பில், பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tanfinet.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் வரும் 14-ம் தேதி வரை செயல்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

திருச்சி: தொழில் பங்கீட்டாளர்களுக்கு அழைப்பு

image

தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் சார்பில், பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tanfinet.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் வரும் 14-ம் தேதி வரை செயல்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

தலைவராக திருப்பூரைச் சேர்ந்தவர் தேர்வு

image

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவராக, திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பப்பீஸ் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 43 ஆண்டு காலமாக வாரிய உறுப்பினராக செயல்பட்டு வந்த அவர், தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சூழலை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி வைத்துள்ளார்.

News January 6, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

புதுச்சேரி: மின்துறையை தனியார் மயமாக்கும் டெண்டர் ரத்து

image

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நோக்கில் 2022 செப்டம்பர் 27ஆம் தேதி விடப்பட்ட டெண்டர், இன்று (ஜன.5) மாலை ரத்து செய்யப்பட்டது. மின்துறை தனியார்மய மற்றும் கார்ப்பரேஷன்மய எதிர்ப்பு போராட்டக்குழு, அரசு ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்களும் சட்ட நடவடிக்கைகளும் இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.

News January 6, 2026

வடகோவனூர்: அரசு பள்ளியில் தேசிய பறவைகள் தின நிகழ்ச்சி

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் வடகோவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய பறவைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் முரளி தலைமையில், மாணவர்கள் வயல்வெளிக்கு சென்றனர். அங்கு பறவைகளை உற்று நோக்கி, பறவைகளின் இயல்புகள் பற்றி ஆசிரியர் விளக்கம் தர, மாணவர்கள் தெரிந்து கொண்டனர். இந்நிகழ்வில் பறவைகளை காப்போம்!..பூமியை பாதுகாப்போம்!.. என்று மாணவர்கள் முழக்கமிட்டனர்.

News January 6, 2026

இராபத்து மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழா பச்சை பரப்புதலுடன் தொடங்கி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் 7-ம் நாளான இன்று இரவு இராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள் மற்றும் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News January 6, 2026

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (05.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

திண்டுக்கல்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி!

image

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், திண்டுக்கல் அரசு மகளிர் கலை கல்லூரியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்திராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகள் பெரிதும் பயனடைவர்.

News January 6, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி.05) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!