India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி கிரமத்தில் சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் சுப்ரமணியசாமி கோயில் அமைந்துள்ளது. முருகரும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் இக்கோயில் சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். மேலும் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க.!

ஆவுடையார்கோவில் வட்டம் திருப்புனவாசல் கிராமத்தில் விருத்தபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமால் தொழிலை இழந்த பிரம்மன், தொழிலை திரும்ப பெற சிவலிங்கத்தை பூஜை செய்து லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்று உருவாக்கினார். அந்த தீர்த்தமே பிரம்ம தீர்த்தம் என்று உருவானது. இங்கு வழிபட்டால் தீராத பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.

அரியலூர் மாவட்டம் காமரசவல்லி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கார்க்கோடேசுவரர் திருக்கோயில், தோஷங்கள் நிவர்த்தியாகும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவருக்கு அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து மனமுருகி வழிபட்டால், தோஷங்கள் நிரவர்தியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள உத்தமர்கோயிலில், மும்மூர்த்திகளும் தேவியர்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். மேலும் இங்கு பிரம்மாவிற்கு தனி சன்னதி அமைத்துள்ளது. குருமார்களில் 7 பேரும் வழிபட்ட சிறப்பான கோயில் இது என்பதால் இது ஆதி குருத்தலம் எனப்படுகிறது. மேலும் குருபரிகார தலமாக இது போற்றப்படுகிறது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

கடலூர் மாவட்டத்தில், கூடலூர் குன்று மலை தொடரில் விலங்கல்பட்டு சிவசுப்ரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கிழக்கு நோக்கிய கருவறையில், மூலவர் சிவசுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சகிதமாக காட்சி அளிக்கிறார். இங்கு மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி சிலையின் நெற்றியில் சிவலிங்கம் அமைந்து இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு, இதனை வேறு எங்கும் காண கிடைக்காத ஒன்றாகும். முருக பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.!

நாகை மாவட்டம் அருகே திருவிடைக்கழியில் சுப்ரமணிய சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள குரா மரத்தின் அடியில், இன்றும் முருகர் உலாவருவதாக ஐதீகம் உள்ளது. முருகன் தவமிருந்து சாபவிமோசனம் பெற்ற இங்கு முருகரும், ஈசனும் ஒரே சன்னதியில் காணப்படுகின்றனர். இங்கு சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. இதை SHARE பண்ணுங்க.

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேதாந்தீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வேதாந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.