India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், மனைவி சுமதி(45). இவருக்கு, கர்ப்பப்பை அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மதியம் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்
விருதுநகர், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரும் இவருடைய மனைவியும் கூலி வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று 7 1/2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.75 ஆயிரம் பணத்தை வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு கிருஷ்ணன் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், மாலை திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பதற்றம் நிலவி வருகிறது.இதனிடையே மனிதர்களின் அருகாமையை சிறுத்தையானது தவிர்க்கும் என்றும் சிறு விலங்குகளை மட்டுமே வேட்டையாட கூடிய தன்மை உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என வனத்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதிகாலை நேரங்களில் கண்டிப்பாக 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
புதுகை, போசம்பட்டியை சேர்ந்தவர் மீனா இவரது மகன் வினோத்குமார் ஆகியோருக்கு இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார் மீனாவை அரிவாளால் தாக்கியதாக மீனா கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வினோத்குமார் மீது
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு, ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும்.
திருச்சி மாவட்ட காவல் துறையில் இயங்கிவரும் வெடிகுண்டு துப்பறியும் (ம)அகற்றும் படையினர் மோப்பநாய் உதவியுடன் சமயபுரம், லால்குடி, முசிறி, தொட்டியம், திருவெறும்பூர், மணப்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை களிமங்களம் அரசு துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் லட்சுமி(58). இவர் நேற்று சேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது கருப்பாயூரணி அருகில் ஆட்டோ ஓட்டுநர், டீசல் நிரப்புவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துச் சென்றார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாகப்பட்டினம் பாராளுமன்ற வேட்பாளர் SGM ரமேஷை ஆதரித்து நாளை (08.04.24) திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகின்றார். இதில் திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட தலைவர் பாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரூர் வெங்கமேடைச் சேர்ந்தவர் சூசை கண்ணு(68). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கேஸ் அடுப்பில் உணவு சமைத்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பெரிய கடை வீதியில் நகை கடை நடத்தி வரும் அர்ஜுன் கௌதமிடம் மஹா.,வை சேர்ந்த அங்கீத், துஷார் பவார், சங்கீத் பன்சால், பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். பாண்டுரங்கனை தவிர மற்ற மூவரும் ஒரே நேரத்தில் வேலையை விட்டு நின்றுள்ளனர். சந்தேகமடைந்த கௌதம் கடையின் இருப்பை சோதித்த போது 3 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.