Tamilnadu

News April 8, 2024

தூத்துக்குடியில் 534 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை ஒட்டி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்த 534 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாக நேற்று ஆட்சியரின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

பழனி கோவிலில் குவிந்த பக்தா்கள்

image

பங்குனி உத்திர திருவிழா, தொடா் விடுமுறை காரணமாக பழனி மலைக்கோவிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். தீா்த்தக்காவடி எடுத்து வந்த பக்தா்களுக்கு கோயில் சாா்பில் தரிசனத்துக்கு தனிவழி அமைக்கப்பட்டிருந்தது. பழனி கிரிவீதியில் பேட்டரி காா்கள் இயக்கும் பேருந்து பற்றாக்குறையாக இருந்ததால், விடுமுறை நாள்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

News April 8, 2024

கன்னியாகுமரி அருகே சோகம்

image

குமரி: பளுகல் சோதனை சாவடியில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு பெனடிக் ராஜ் நிலைதடுமாறி ஓடையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவரை
சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொல்லங்கோடு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

News April 8, 2024

தஞ்சை: போலீசார், துணை ராணுவத்தினர் சோதனை

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று(மே.7) திருவையாறு பகுதியில் உள்ள தில்லைஸ்தானம், கண்டியூர் உள்பட முக்கிய இடங்களில் மருவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய் சங்கர், ஏட்டு பார்த்திபன் மற்றும் துணை ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.

News April 8, 2024

சென்னை சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

image

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(ஏப்.8) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் சேப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்து உள்ளதாக பெருநகர சென்னை மாநகர காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் தங்கள் பயணங்களை திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 8, 2024

அரியலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து

image

செந்துறை அண்ணா நகர் பகுதி பேருந்து நிலையம் அருகில் நேற்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபதுக்குள்ளானது. இதில் சேடக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 8, 2024

தருமபுரி அருகே பாமக கிளை கூட்டம்

image

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஊராட்சியில் உள்ள ஜீவா நகர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் ஜீவா நகர் கிராமத்தை சேர்ந்த அனைவரும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் அனைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 8, 2024

விழுப்புரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு

image

விழுப்புரம் மாவட்டம் தெளி கிராமத்தில் அடிக்கடி மின்னழுத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. அதுபோக மாலை 4 மணிக்கு துண்டிக்கப்படும் மின்சாரம் இரவு 9 மணிக்குதான் வருகிறது. அடிக்கடி இதுபோல நடப்பதால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்கள் மிகவும் பாதிப்பை சந்திக்கின்றனர். குழந்தைகளும், பெரியவர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

News April 8, 2024

வேலூர்: ரூ.56 லட்சத்தை திரும்ப ஒப்படைத்த அதிகாரிகள்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி மாலை முதல் நேற்று வரை பறக்கும்படை குழுவினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் மொத்தம் ரூ. 71,87,150 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களுக்கான உரிய ஆவணங்களை காண்பித்து இதுவரை ரூ.56,24,530 ரொக்கப்பணம் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 8, 2024

திருப்புகலூர்: பெண் மயக்கமடைந்து கீழே விழுந்து சாவு

image

திருப்புகலூர் காசிநாதன் மனைவி ஆனந்தவள்ளி (வயது 54). இவர் நேற்று தனது மகளின் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளை மறித்து அதில் ஏறி வந்துள்ளார். வரும் வழியில் திடீரென ஆனந்தவள்ளிக்கு ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டவர் இன்று உயிரிழந்தார். திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!