Tamilnadu

News April 8, 2024

நெல்லை பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

image

நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நேற்று (ஏப்.7) தேர்தல் விதிமுறைகளை மீறி கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் இருக்கன்துறை போன்ற பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் பழவூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News April 8, 2024

ஈரோடு அருகே விழுந்து கிடந்த காட்டு யானை

image

சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட குரும்பூர் கிராம வனப்பகுதியிலிருந்து நேற்று இரவு யானை ஒன்று தள்ளாடிய நிலையில் நடக்க முடியாமல் விழுந்தது. இன்று காலை அப்பகுதிக்கு சென்ற மக்கள் யானை படுத்திருந்தது கண்டு கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்று உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

News April 8, 2024

தீ வைக்கும் போதை ஆசாமிகளால் அபாயம்

image

காங்கேயத்தை அடுத்த கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அகிலாண்டபுரம் பிரிவில் காங்கேயம் ஒழுங்கும் முறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக போதை ஆசாமிகள் மது மற்றும் கஞ்சா போதையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வளாகத்தினுள் தீ வைத்து விட்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

News April 8, 2024

புதுக்கோட்டை அருகே சரமாரி கத்திக்குத்து 

image

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் எல்லைக்கோட்டை இன்று இளைஞருக்கு கத்திக்குத்து. இந்த கத்திக்குத்து சம்பவத்தில் உலகம்பட்டியை சேர்ந்த தீவுராஜ் (19) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2024

சந்திரபாடி ஊராட்சியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் செம்பனார்கோவில் ஒன்றியம் சந்திரபாடி ஊராட்சியில் மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று நேற்று இரவு துண்டு பிரசுரங்கள் வழங்கி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

News April 8, 2024

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நேற்று நெய்வேலி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்க்கு நெய்வேலி பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். உடன் அமைச்சர் கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

News April 8, 2024

வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை

image

தென்காசியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7ம் தேதி மாவட்ட எஸ் பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில். பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

News April 8, 2024

நாமக்கல்லில் இன்று இதற்கு தடை

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கவும் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தர உள்ளார். எனவே அவரின் வருகையையொட்டி இன்று 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்குள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

திருச்சியில் லட்சக்கணக்கில் மோசடி 

image

பொன்மலைப்பட்டியை சேர்ந்த மரியமார்ட்டின் இருதயராஜ் (63). இவர் இணைய வழியில் ரூ.10,500 முதலீடு செய்து ஊக்கத்தொகை பெற்றுள்ளார். பின்னர் ரூ.16.51லட்சம் தொகையை இணைய வழியில் முதலீடு செய்துள்ளார். ஆனால் முதலீடு செய்த பணமும் திருப்பி வரவில்லை. அதற்குரிய சிறப்பு ஊக்க தொகையும் வரவில்லை. இதுகுறித்து கணினிசார் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.

News April 8, 2024

14 வேட்பாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கு முழுமையாக தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள 14 வேட்பாளர்களும் இன்று (ஏப்.8) மாலை 5 மணிக்குள் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தேர்தல் செலவின பார்வையாளர் காசி சுஹைல் அனீஸ் நேற்று (ஏப்.7) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!