India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பேட்டை டவுன் பகுதியை சேர்ந்த 7 ரவுடிகளை கடந்த ஒரு வாரத்தில் கைது செய்தனர். நன்னடத்தை விதியை மீறும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ புகழேந்தி இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறலாம், அதற்கான அறிவிப்பும் சில நாள்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவில் தலைவர் பஞ்சம் ஏற்பட்டதால் ரெடிமேடாக அண்ணாமலை தலைவராக நியமிக்கட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு செல்லும் மற்ற கட்சிகள் அனைத்தும் இரும்பு கடைக்கே செல்லும் என அண்ணாமலை கூறிய கருத்திற்கு இன்று ஆர்.பி.உதயகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.
வாணாபுரம் அடுத்த பழைய சிறுவங்கூரைச் சேர்ந்தவர் மூர்த்தி, மனைவி பேபி மனோரஞ்சிதம், (62). ஓய்வுபெற்ற அங்கன்வாடி மைய பொறுப்பாளர். இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு வெளியே சிமென்ட் சாலையில் துாங்கினார். அப்போது பழைய சிறுவங்கூரில் இருந்து பல்லகச்சேரிக்கு சென்ற மினி சரக்கு வேன் இவர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்தவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் எடுப்பதில் தற்காலிகமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடங்கியுள்ளது. இதை சரிசெய்யும் பணி மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மெட்ரோ நிலையங்களின் டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஓய்வு பெற்ற காவலா்கள், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் தலைவா் போஸ், பொதுச்செயலா் குமரவேல், பொருளாளா் ராஜா சந்திரசேகா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு, வருகிற 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு ஊதியம் வழங்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். சரவணம்பட்டி பகுதியில் அவர் பேசியதாவது, ‘கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முன் சாலை வசதியை ஏற்படுத்தித் தாருங்கள், கிரிகெட் மைதானம் அமைக்க பிசிசிஐயிடம் நாங்கள் நிதி வாங்கித் தருகிறோம்’ என்றார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காவலர் புரமோத் குமார் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்தார். இவர் ஏப்.3 அன்று பேருந்தில் இருந்து இறங்கி நடந்து வந்தபோது, பின்னால் சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த பைக் புரமோத்குமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்த புரமோத் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அருகே பர்வதவர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம்(ஏப்.6) அன்று பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து, கோயில் காவலாளி வெளிப்புறக்கதவை திறந்து வைத்து சென்றுள்ளார். மறுநாள் காலை அரச்சகர் பூஜை செய்ய வந்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி மாயமாகியிருந்தது. இது குறித்த புகாரில் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம், பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் மற்றும் டாக்டர் மூனீஸ் சாரிடபுள் சார்பாக சுமார் 2500 நபர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நடைபேரணியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம். சரயு தலைமையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழியை நேற்று எடுத்துக்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.