Tamilnadu

News April 8, 2024

சரக்கு போக்குவரத்தில், சாதித்த திருச்சி ரயில்வே.

image

திருச்சி ரயில்வே கோட்டை மேலாளர் அன்பழகன், நேற்று செய்தியாளர்களிடம், தெரிவித்தது .2023-24 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டம் சரக்கு அனுப்புவது பயணிகள் அனுப்புவது உள்ளிட்டவைகளில் அதிக அளவு வருவாய் ஈட்டி உள்ளது. 2024 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் 15.077 மில்லியன் டன்களுக்கு அனுப்பியதன் மூலம்,857. 04 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று கூறினார்.

News April 8, 2024

50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இல்லத்தில் நேற்று தலைவுடையார் கோவில் பத்து ஊராட்சியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் அவர்களுக்கு அதிமுக சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு.

News April 8, 2024

மானாமதுரை அருகே பெண் ரயிலில் அடிப்பட்டு பலி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சூடியூர் ரயில் நிலையங்கள் இடையே கீழப்பெருங்கரை ரயில் தண்டவாளத்துக்கு இடையே நேற்று (07/02024) 70 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர் அடிபட்டு கிடப்பதாக மானாமதுரை இருப்புபாதை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற சார்பு ஆய்வாளர் தனுஷ்கோடி தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News April 8, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

ஆண்டிபட்டியை சேர்ந்த அருண் நேற்று இரவு தீனதயாளன் என்பவருடன் ஜம்புலிபுத்தூருக்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தார். கள்ளர் விடுதி அருகே சென்ற போது எதிரே வந்த டூவீலர் மீது மோதியதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அருண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 8, 2024

ஈரோடு : ஏப்ரல் 15க்குள் இணையதள வசதி

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில், 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச் சாவடிகள் மற்றும் 1,125 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் வாக்குச் சாவடிகளில் இணையதள வசதிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ஏற்படுத்தப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 8, 2024

சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலி

image

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மகாராஜா. இவர் நேற்று கோவில்பட்டி வந்துவிட்டு ஊர் திரும்புவதற்காக தனது உறவினர் புவனேஸ்வரன் உடன் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது கார் ஒன்று மோதி காயமடைந்த இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 8, 2024

திருவள்ளூர்: சோதனை சாவடியில் தீவிர சோதனை

image

திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தற்போது முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி, மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வெளிமாநில வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டன.

News April 8, 2024

மோடி வேலூர் வருகை: போலீசார் தீவிர சோதனை

image

மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை மறுநாள் (ஏப்.10) நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இதையொட்டி கோட்டை மைதானத்தில் இன்று (ஏப்ரல் 8) வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

News April 8, 2024

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

image

திண்டுக்கல் அருகே மாலப்பட்டி பகுதியில் 13 வயது சிறுவன் விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனின் உடலை இன்று மீட்டனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 8, 2024

ஆ.ராசாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

image

நீலகிரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆ.இராசாவை ஆதரித்து கீழ்கோத்தகிரி ஒன்றியம், கைகாட்டி பகுதியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான கா.ராமசந்திரன் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். அப்போது, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து ஆ.ராசாவை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

error: Content is protected !!