Tamilnadu

News April 8, 2024

திருவாரூர்: சாலை விபத்தில் இளைஞர் பலி

image

திருவாரூர் மாவட்டம், அதங்குடி பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ்(21) நாகை, தோப்புத்துறையைச் சேர்ந்த தமிழரன் என்பருடன் காருக்குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்வுக்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திருக்குவளை அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியில் மோதி தலை நசுங்கி உயிரிழந்தார். பின்னால் இருந்த தமிழரசன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

News April 8, 2024

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் சிக்னலில் இன்று (ஏப்ரல்-8) முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது டாடா ஏசி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்து வந்த ஸ்ரீதேவி(41) என்பவர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

News April 8, 2024

ஸ்ரீபெரும்புதூர்: துப்பாக்கி ஏந்தி வீடு வீடாக..!

image

தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று(ஏப்.8) ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியை, 5 பகுதிகளாக பிரித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டியுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாக சென்று முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களிடம் தபால் வாக்கு பதிவில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 8, 2024

தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை

image

புதுச்சேரி, அரியாங்குப்பம், மணவெளி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. இந்த கொடூரச் செயலை செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வாய்ஸ் பார் வாய்ஸ்லஸ் அமைப்பு சார்பாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமும் உணவு அளித்து அந்த பகுதி மக்கள் நாய்களின் நிலை அறிந்து பெரும் துயரத்தில் ஆழ்ந்ததுள்ளனர்.

News April 8, 2024

பூட்டிய வீட்டில் ஆண் பிணம் போலீஸ் விசாரணை

image

திருமங்கலம் கக்கன் காலனி ஓடை அருகே ஒரு பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டின் கதையை உடைத்து பார்த்தபோது வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கடந்தது. விசாரணையில் அவர் சுந்தர்(38) கடந்த 8 ஆண்டுகளுக்காக மனைவியை பிரிந்து வாழ்கிறார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News April 8, 2024

ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

வால்பாறையில் துணிக்கடை நடத்தி வருபவர் சுதீர். இவரது தங்கை மகன் ஷியாம். வால்பாறையில் உள்ள துணிக்கடை, உணவகங்களை நிர்வகித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வால்பாறை அடுத்துள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 8, 2024

கள்ளக்குறிச்சி எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 8, 2024

பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

image

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.வடலூர் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு.

News April 8, 2024

சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

image

சென்னையில், பிரதமர் பங்கேற்கும் ‘ரோடு ஷோ’ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் நிறைந்த பரபரப்பான இடமாகும். எனவே தியாகராய நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமா் மோடி தங்கும் கிண்டி கவர்னர் மாளிகை பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னையில் நாளை 22 ஆயிரம் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

News April 8, 2024

புதுக்கோட்டை அருகே வாலிபரின் விபரீத செயல் 

image

சிங்கம்புணரி அருகே முறையூரை சேர்ந்தவர் கருப்பையா. கொத்தனாரான இவர், நேற்று விஷம் குடித்து புதுக்கோட்டை மாவட்டம், கல்லூரில் ராமையா என்பவர் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டுசெல்லும் வழியிலேயே கருப்பையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை

error: Content is protected !!