Tamilnadu

News March 27, 2024

தருமபுரி வருகை தரும் முதல்வர்

image

தருமபுரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து வருகின்ற 29 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தருமபுரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதில் தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் , சுப்பிரமணி ஆகியோர் இணைந்து திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். முதல்வர் வருகையையொட்டி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

News March 27, 2024

பாமக வேட்பாளர் செளமியா சாமி தரிசனம்

image

மேச்சேரி தித்திகிரிபட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார். உடன் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, சதாசிவம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 27, 2024

தூத்துக்குடி – தேர்தல் பார்வையாளர் நியமனம்

image

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக திவேஷ் ஷெஹரா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் செலவினங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவைகளை இவரது கைபேசி எண் 8925921303 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார் .

News March 27, 2024

திருச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

image

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட, தேர்தல் பார்வையாளர் தினேஷ் மற்றும் தேர்தல் பார்வையாளர் அமித் குமார் விஸ்வகர்மா ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

News March 27, 2024

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று (மார்ச் 27) நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த காவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

News March 27, 2024

நாமக்கல்லில் 58 பேர் வேட்புமனு தாக்கல்

image

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் துவங்கியது. இந்நிலையில் இன்று 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால், ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு தாக்கல் செய்தனர். மொத்தமாக 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

image

புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்கள். புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி உட்பட 34 வேட்பாளர்கள் 45 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் தெரிவித்தார்.

News March 27, 2024

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிமுக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பெண் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

News March 27, 2024

உடுமலையில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு திருப்பூர் சாலையில் உள்ள ஆர் கே ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு பயிற்சி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை அந்தந்த பாடங்களில் சிறப்பான ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2024

குமரி: விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல்

image

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் விஜய் வசந்த் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த செல்லசாமி காங்கிரஸ் சட்டக் சபை கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!