Tamilnadu

News January 6, 2026

மதுரை: முதல்வர் வருகை; ட்ரோன் பறக்க தடை

image

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து மதுரை வருகை தந்து, தனியார் விடுதியில் ஓய்வெடுக்கிறார். நாளை திண்டுக்கல்லில் அரசு விழாவில் கலந்து கொண்டு, பின்னர் மதுரை விமான நிலையம் வழியாக சென்னைக்கு புறப்படுகிறார். இதனை முன்னிட்டு, மதுரை விமான நிலையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வர் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள், பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

கள்ளக்குறிச்சியில் திருமண வரம் அருளும் அற்புத கோயில்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் அமைந்துள்ளது பக்தஜனேஸ்வரர் கோயில். கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயிலில் மூலவராக பக்தஜனேசுவரர் உள்ளார். இந்த ஆலயத்தில் வைத்து தேவியை, சிவபெருமான் மணமுடித்ததாக நம்பப்படுவதால், இங்கு செவ்வாய், வெள்ளி தோறும் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் வந்து திரிசனம் செய்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 6, 2026

நாமக்கல்: முட்டை விலை 20 காசுகள் சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.20- ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 6.00- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை சரிவடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 6, 2026

மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

image

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை காரைக்காலின் 11 மீனவர்களை கைது செய்தது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

மதுரைக்கு பொங்கல் பரிசாக ரூ.284 கோடி ஒதுக்கீடு!

image

தமிழ்நாடு அரசு வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு நீள கரும்பு வழங்கவுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் தகுதியான ரேஷன் அட்டை தாரர்களின் எண்ணிக்கை: 9,46,728. இதன்படி, மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.2,840,184,000 (284 கோடியே 1 இலட்சத்து 84 ஆயிரம்) தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. *ஷேர்

News January 6, 2026

விருதுநகரில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் விநியோகம்

image

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் நேற்று முதல் துவங்கியது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 4,039 அரிசி ரேஷன் கார்டு தாரர்கள், இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று முதல் துவங்கி நாளை வரை ரேஷன் விற்பனையாளர்கள் மூலம் கார்டுகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படுகிறது.

News January 6, 2026

BREAKING விருதுநகரில் வசூலில் ஈடுபட்ட காவலர் மாற்றம்

image

விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் ராமச்சந்திரன். இவர் உயர் அதிகாரிகளான இன்ஸ்பெக்ட,ர் எஸ்ஐ ஆகியோரின் உத்தரவுகளை மதிப்பதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமச்சந்திரன் வாகனத்தில் பட்டாசுக்கான திரிகளை கடத்திச் செல்பவர்களிடம் பணம் வசூலில் ஈடுபட்டதாக புகார் வந்தது. இது குறித்த விசாரணையில் எஸ்பி கண்ணன் ராமச்சந்திரனை ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

News January 6, 2026

திருவள்ளூர்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

திருவள்ளூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

கிருஷ்ணகிரியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

கிருஷ்ணகிரியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 6, 2026

சென்னையில் இன்று முதல் அமல்

image

சென்னையில் டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால், ரூ. 10-வழங்கும் திட்டம், இன்று (ஜன. 06) முதல் அறிமுகமாகிறது. பொதுவெளியில் காலி பாட்டில்கள் வீசப்படுவதை தவிர்த்து, சுற்று சூழல் மற்றும் மாசை குறைப்பதே, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். மது வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 செலுத்தி, காலி பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும் போது, ரூ. 10-த்தை திரும்ப பெறலாம்.

error: Content is protected !!