Tamilnadu

News March 27, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான அனைத்து விதிமீறல்களுள் தேர்தல் பொதுப்பார்வையாளரின் அலைபேசி எண்ணான 9363966536 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறையின் பயனீர் விடுதியில் தங்கி உள்ள தேர்தல் பொது பார்வையாளரிடம் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார், தகவல் அளிக்கலாம் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 27, 2024

திருச்சி: கத்தியை காட்டி மிரட்டல், 7 ஆண்டு சிறை

image

திருச்சி கேகே நகர் அருகே மன்னார்புரம் பகுதியில் கடந்த 15.5.2022 அன்று அதிகாலை 4:30 மணிக்கு மளிகை கடைக்காரர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் திருடிய ராஜேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் இருந்து வந்தார். இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணையில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை விதித்து திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

News March 27, 2024

பாலக்கோடு: பற்றி எரிந்த நெருப்பு

image

புலிகரை அருகே உள்ள கோவிலூரில் லாரி ஒன்று உயரத்தில் வைக்கோல் ஏற்றியதால் மின் கம்பியில் உரசி தீ பற்றியது. இதை அறிந்த ஓட்டுனர் வாகனத்தை வேகமாக ஒட்டி ஊரை விட்டு வெளிப்புறத்திற்கு கொண்டு சென்றார் .ஊர் பொதுமக்கள் அருகே இருந்த போர்வெல்லில் நீரை கொண்டு வந்து ஊற்றியும், மண்ணை தூவியும் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

News March 27, 2024

திருப்பத்தூர்: 25 பேர் மீது வழக்கு

image

ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணம் வினியோகம், தேர்தல் விளம்பரம் உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், உதவி தேர்தல் அலுவலரிடம் முறையான அனுமதி பெறாமல் சுவர்களில் பல்வேறு கட்சிகளின் சின்னங்களை விளம்பரம் செய்த 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News March 27, 2024

திமுக வேட்பாளருக்கு ஆதரவு

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு ஜவகர் இல்லம் காங்கிரஸ் அலுவலகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில், இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

News March 27, 2024

ஒளிரும் சட்டைகள் வழங்கல்

image

ஈரோடு மாவட்டம், சம்பத் நகர்- நசியனூர் சாலை சந்திப்பு பகுதியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ஒளிரும் சட்டைகள் வழங்கப்பட்டது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் மணிஷ், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி இருந்தனர்.

News March 27, 2024

அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

image

ஈரோடு அடுத்த காலிங்கராயன்பாளையம் பகுதியில், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ரூ.10,35,000 மதிப்புள்ள சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த சேலைகள், ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. எனவே பறக்கும் படையினர் அளித்த புகாரில் அதிமுக வேட்பாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 27, 2024

கடலூர்: கார்ல் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவிப்பு!

image

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத், கடலூர், சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள காரல் மார்க்ஸ் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், திமுக மாநகர செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

முன்னாள் எம்பி வேட்பு மனு நிராகரிப்பு

image

திருநெல்வேலி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தொகுதி அதிகாரப்பூர்வ வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு எதிராக போட்டி வேட்பாளராக களம் இறங்க இன்று (மார்ச் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‌வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டதாக கூறி அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

News March 27, 2024

கடலூர்: வேட்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பு

image

திராவிட முன்னேற்ற கழக கடலூர், திருப்பாதிரிப்புலியூர் தகவல் தொழில்நுட்ப அணி பகுதி ஒருங்கிணைப்பாளர் அ. விக்னேஷ் இன்று கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

error: Content is protected !!