Tamilnadu

News March 28, 2024

கடலூர்: தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்ட மாவட்ட செயலாளர்

image

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று திறக்கப்பட உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை, பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் சண் முத்துகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

நீலகிரி: மாரியம்மன் திருத்தேர் திருவிழா

image

கோத்தகிரி அரவேனு அருகே உள்ளது சக்கத்தா மாரியம்மன் கோயில். நேற்று (மார்ச் 27) காலை திருத்தேர் வீதிவலம் வடம் பிடித்தல் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி ஊர்வலம் சென்றது. சக்கத்தா , ஜக்கனாரை, அரவேனு சாலை என முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்று அடைந்தது. அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News March 28, 2024

நாமக்கல்: தேர்தலில் போட்டியிட 47 பேர் வேட்பு மனு 

image

நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 47 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் கடந்த 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது கடைசி நாளான இன்று மாட்டு வண்டிகளில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இன்று மட்டும் 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் வேட்பு மனு பரிசீலனை 28ஆம் தேதி நடைபெறுகிறது 30 – ந்தேதி வேட்பு மனு வாபஸ் பெறலாம்.

News March 28, 2024

திருப்பூர்: தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..!

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் தகுதி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகின்ற 20ஆம் தேதிமுதல் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.

News March 27, 2024

கோவை மாவட்டத்தில் மொத்தமாக 103 வேட்பு மனுக்கள் தாக்கல்

image

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்.20 ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் வேட்பாளர்களிடம் பெறப்பட்டன. இன்று (ஏப். 27) மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. கோவை மாவட்டத்தில் கோவையில் 59 மனுக்களும், பொள்ளாச்சியில் 44 மனுக்களும் இன்று வரை பெறப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (ஏப். 28) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2024

ஈரோடு வருகை தரும் கமல்ஹாசன்

image

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள மார்ச் 29ஆம் தேதி வருகை தரவுள்ளார். வீரப்பன்சத்திரம், காந்தி சிலை, குமாரபாளையம் ஆகிய மூன்று இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மருத்துவ மாணவர்

image

வாழப்பாடி அருகே சேசன்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், மகன் அஜித்குமார்(25). பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்துள்ளார். சான்றிதழ் பெறுவதற்காக, 2023 அக்டோபரில் மீண்டும் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். அங்கு உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என, இவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 27, 2024

வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளருக்கு பாராட்டு

image

வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி காவல் ஆய்வாளர் பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உதவி காவல் ஆய்வாளர் பாராட்டுகளையும் மற்றும் ரூ5000 ரொக்கம் வழங்கி சிறப்பித்தார். உடன் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பலர் உள்ளனர்.

News March 27, 2024

கழுத்தை அறுத்து செயின் பறித்த நபர் கைது

image

பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55)என்பவரை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை செய்து கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து சென்றார. இதையடுத்து  பொன்னேரி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அசோக் (35) என்பவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2024

திண்டுக்கல்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

image

வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமமான 14வது வார்டு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு முறையான சாலை வசதி குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தும் கருப்பு கொடி வைத்துள்ளனர். இதை பார்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

error: Content is protected !!