India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் செய்திக் குறிப்பில்:- தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைத்து சிபிஐ அதிகாரி என்றும் உங்களுடைய பெயரில் வந்துள்ள பார்சலில் போதை பொருட்கள் உள்ளது என்றும் உங்களை கைது செய்யாமல் இருக்க ரூ.10 லட்சம் வரை பணத்தை செலுத்த வேண்டும் என்று மிரட்டுவார்கள். இது முற்றிலும் மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளியின் செயல் எனவும் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
சிவகங்கை, திருப்பத்தூரில், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பணிமனை என்ற அதிமுக அலுவலகம் மாவட்ட அவை தலைவர் ஏவி.நாகராஜன் தலைமையில், நகரச் செயலாளர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சேவியர்தாஸ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தவசிராஜன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது காட்டுபத்திரகாளி அம்மன் கோயில் அருகே கூடலூரை சேர்ந்த ரமேஷ், வீரணன் ஆகிய இருவரும் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அருகில் இருந்த முட்புதரை சோதனையிட்டபோது, அரசு அனுமதி இன்றி விற்க வைத்திருந்த 41 மதுபாட்டில்களை கைப்பற்றினர். பின்னர் இருவரையும் கைது செய்தனர்.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவருமான கணேசமூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அ.கணேசமூர்த்தியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் நேற்று தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்கோட்டத்தில் உள்ள பதற்றமான வாக்கு சாவடி மையங்களான பவித்திரமாணிக்கம், காட்டூர், அகரத்திருநல்லூர், திருக்கண்ணமங்கை ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கனிமொழி எம்.பி போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனு பரிசீலனை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனையில் கனிமொழி எம்.பி யின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நெல்லையைச் சேர்ந்த ராக்கெட்ராஜா ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 2009-ம் ஆண்டில் வாகன சோதனையின் போது குண்டு வீசிய சம்பவத்தில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறி ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்த நிலையில், நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
விழுப்புரம் தனி நாடாளுமன்ற தொகுதி, பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று (மார்ச் 28) விழுப்புரத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்றார். அப்போது பொன்முடியின் வாகனத்தில் பானை சின்னம் இருப்பதை பார்த்த திருமா, புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.