India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

மதுரை மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 226 செவிலியர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆன்லைன் மூலம் 4,714 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, இட ஒதுக்கீடு விதிகளைப் பின்பற்றி தற்காலிகப் பட்டியல், காத்திருப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு கல்லூரி இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற சம்பவங்கள் ஈடுபட்டவா்கள், ரௌடிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டில் நடைபெற்ற திருட்டு, கொள்ளை, ஆதாய கொலை போன்ற வழக்குகளில் 427 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 702 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா தெரிவித்தார்

திருப்பூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு<

நீலகிரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு<

திருச்செந்தூர், அமலிநகரை சேர்ந்த இளம்பெண் தனியார் மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்று சில நிமிடத்தில் அங்குள்ள குப்பை தொட்டியில் வீசிச் சென்றுள்ளார். அப்பகுதியில் இறந்த நிலையில் குழந்தையை போலீசார் மீட்டனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொங்கல் பண்டிகை இம்மாதம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.,11 (ம) 18-ஆம் தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து ஜன.,12 மற்றும் 19-ஆம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதைப்போல் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.,13, 20 தேதிகளிலும், தாம்பரத்திலிருந்து குமரிக்கு ஜன.,14, 21 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை மாவட்ட மக்களே! நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகைபுரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் .சி. பி. இராதாகிருஷ்ணனை, வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.