India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் தாயனூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், மேல்மலையனூர், தாயனூர், தேவனூர், வளத்தி, அன்னமங்கலம், விக்கிரவாண்டி, சுங்கச்சாவடி, முண்டியம்பாக்கம், சின்னதச்சூர், பாரதிநகர், பனப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் மற்றும் மூங்கில்பாடி துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சர்க்கரை ஆலை பகுதி, நீலமங்கலம், மேல்நாரியப்பனூர், திம்மாபுரம், தென்பொன்பரப்பி, எடுத்தவாய்நத்தம், கரடிசித்தூர், அரசம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்பாடி போலீசார் வடுகங்குட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் ஹான்ஸ், கூலிப் பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. தொடர்ந்து, ரூ.12,000 மதிப்பிலான 2.6 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், விற்பனையாளர் சுமத்ராவை (44) போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது கணவர் கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

குன்றத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தையல் தொழிலாளி புருஷோத்தமன் (44), மதுப்பழக்கத்தால் வேலைக்குச் செல்லாததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, புருஷோத்தமன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் விஜயராஜா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கார்த்திகேயனின் மகன் நவீன் (9), பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், பாட்டியுடன் இருந்துள்ளார். அப்போது பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தபோது 8-வது மாடி தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <

தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மத்திய அரசு சான்றிதழுடன் ஜன.19 -பிப்.25 வரை இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜன.19ஆம் தேதிக்கு முன் பயிற்சி மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தங்குமிடம், உணவு இலவசம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

விருதுநகர் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு<

நெல்லை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <

நெல்லை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.